முகப்பு


1193.பார்போற்றும் தூதரே பாடி நின்றோம் உம்மையே
பார்போற்றும் தூதரே பாடி நின்றோம் உம்மையே
தூய மிக்கேல் அதிதூதரே
இறை துணை வேண்டி உமை வேண்டினோம் - 2 (2)

1. ஆண்டவரின் அருகினில் அணி அணியாய்ப் பணிந்திடும்
ஆனந்த தூதர் தலைவரே
ஆறுதல் தேடிடும் அடியவர் எமக்கென
ஆதரவாய் வேண்டும துணைவரே - 2
எம் அரணாகி அனைத்தும் நடத்துமே

உம் அடைக்கலத்தில் இறையைக் காண்போமே

2. கடவுளின் நிகரெனில் கடவுள் தாம் எனும் பெயரில்
கடமையோடு காக்கும் வல்லவரே
கடனும் நோயும் கண்ணீரும் அலைபோலே எழுந்திடினும்
கலங்கரையாய் விளங்கும் வல்லவரே - 2
எம் கவலை யாவும் துரத்த வாருமே
தினம் கலங்காது வாழச் செய்யுமே - 2