முகப்பு


1196.சேசு மரி சூசை பார் போற்றும் திருக்குடும்பம்
சேசு மரி சூசை பார் போற்றும் திருக்குடும்பம்
இறைவனின் திருவுளமே நிறைவேற்றும் திருக்குடும்பம் - 2
நேர்மையின் இலக்கணம் சூசை
தூய்மையின் பிறப்பிடம் மரியாள்
இருவரின் மகனாய் இறைவனின்
சுதனாய் உலகினில் வாழ்ந்தவர் இயேசு
இறை வாழ்வினைத் தந்தவர் இயேசு

1. மண்ணோர் விண்ணோர் புகழ் ஏற்கும்
இந்நாள் எந்நாள் பார் போற்றும் - 2
பாசமும் நேசமும் நிறைந்திருக்கும்
பரிவன்புடனே வாழ்ந்திருக்கும் - 2

2. நன்மையின் இருப்பிடம் இறை குடும்பம்
முன்மாதிரியானது திருக்குடும்பம்
அன்பால் பண்பால் உறவாகும்
அஞ்சா நெஞ்சம் உயர்வேதம் - 2
பக்தியின் மார்க்கம் சிறந்தோங்கும்
பரமனின் அன்பே நிலையாகும் - 2
இல்லறக் கலங்கரை இறை குடும்பம்
நம்மை வாழவைப்பது திருக்குடும்பம்