முகப்பு


1198.இசை என்னும் அமுதை இறைவனுக்கே
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
என்றும் சுவை தந்த செசிலியே காவலியே
இசை என்னும் அமுதே இறைவனுக்கே
பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்
பணித்திட்டோம் அருள் பெறவே

1. தேனினும் இனிய தமிழிசையாலே தினமும்மை புகழ்வோமே
தேவனை நாளும் புகழ்ந்து நாம்பாட தேடும் உம் அருள் தாராய்

2. பாடகர் அனைவரின் காவலும் நீயே பாடிடுவோம் தினமே
பாடலினாலே மறைப் பணி புரிய பரனிடம் வேண்டிடுவாய்