1199.இன்னிசை இராணியே எங்கள் காவலியே
இன்னிசை இராணியே எங்கள் காவலியே
பொன்னரும் பெரிய நாளே உந்தன் நாளுமே
பொன்னரும் பொருளே போலப் - போற்றும் கற்பதை
தன்னகமே காத்து வந்த புண்ணியசீலியே
உன்னொலியே வான் நன்னொலியாமே - 2
மின்னும் மோட்ச செல்வம் கொண்ட கன்னி செசிலி
எங்குமே சங்கீத வாணர் ஏற்றுவார்
மங்கையர்க்கரசி என்று மண்ணில் போற்றுவார்
இன்னிசை சுவையால் இயேசு இன்பம் சூழ்ந்திடப்
பொங்கும் அன்பில் ஆழ்ந்து தேவசிந்தை கொண்டிட
மங்கா ஞானமே எங்கும் பொங்கவே - 2
தன்கதியைத் தேடிச்சென்ற - கன்னி செசிலி