முகப்பு


1201.இயேசுவின் அன்புச் சீடரான புனித தோமையே
இயேசுவின் அன்புச் சீடரான புனித தோமையே
எம்மைக் கருணை கொண்டு காத்தருள வேண்டுகின்றோமே
பாடுவோம் இனிதே போற்றுவோம்
நாளுமே உம் புகழைப் பாடுவோம்

1. புதுமைகள் அற்புதங்கள் புரியும் புனிதரே
புவியில் பூத்த மக்கள் எமக்கு ஆசீர் தாருமே

2. ஏழைகள் எளியவரை காக்கும் வள்ளலே
ஏழ்மை நீக்கி மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தாருமே