முகப்பு


1202.தேசம் போற்றும் தூயவரே தோமாவே
தேசம் போற்றும் தூயவரே தோமாவே
உம்மைத் தேடினோம் வேண்டினோம் அருள்வீரே - 2 உம்
திருப்பாத மலையில் புகழ்பாடி வந்தோம் - 2
நாள்தோறும் துணையாக வாருமே
தூய தோமாவே வாழ்க தோமாவே வாழ்க
மறைவாழ்வின் சோதியே வாழ்க - 2

1. நற்செய்தி கொண்டு வந்த மாமுனியே
நன்றி துதி பாடுகிறோம் உம் பதமே - 2
பாரத மண்ணிலே மாண்புடன் வந்தவா - 2
உமைப்போல தினம் நாங்கள் வாழ அருளே - தோமாவே

2. இயேசுவின் திருக்காயம் பணிந்தவரே
இறைவிசுவாசம் தனை வளர்த்தவரே - 2
செந்நீரும் சிந்தினீர் சிலுவையின் துணையிலே - 2
ஒருபோதும் மறவோமே உந்தன் தியாகமே - தோமாவே