முகப்பு


1211.இயேசு எனக்குப் போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி
இயேசு எனக்குப் போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி - 2

1. பாவத்தோடு வந்தேன் என்னைப் பாசத்தோடு ஏற்றார் - 2
கண்ணிழந்து நின்றேன் என்னைக்
கைகொடுத்துக் காத்தார் - 2 அந்த

2. கவலையோடு நின்றேன் என்னைக்
கருணையோடு பார்த்தார் - 2
வழி இழந்து நின்றேன் என்னை
வழியில் வந்து ஏற்றார் - 2 அந்த

3. உலகில் யாரும் வெறுப்பார்
அவர் உருக்கத்தோடு அணைப்பார் - 2
பாவி என்றும் பாரார் என்னைத்
தாவி வந்து காப்பார் - 2 அந்த