1222.இயேசுவே இறைவா தொழுகின்றேன்
இயேசுவே இறைவா தொழுகின்றேன் - உன்
திருவடி தொட நான் விழைகின்றேன்
இயேசுவே இறைவா மகிழ்கின்றேன் - உன்
தோழனாய் என்னை ஏற்றுக்கொண்டாய்
1. கருவினிலே எனைத் தெரிந்து கொண்டாய் - என்
உருவினிலே உந்தன் உருப் பதித்தாய்
கடந்திட்ட பாதையை நோக்குகின்றேன் - உன்
காலடிச் சுவடுகள் காண்கின்றேன்
என் கரம் பிடித்து நடத்திச் சென்றாய்
உன் வழியில் எனை நடத்திச் சென்றாய்
நன்மையின் நாயகன் நீயன்றோ
நன்றியால் உன் புகழ் பாடிடுவேன்
2. உறவுகள் என்னைப் பிரிந்திட்ட வேளை
உணர்ந்தேன் இருள் எனைச் சூழ்ந்தது போல்
சிலுவையின் நீரால் எனைத் தீண்டியவேளை
தென்றலின் இனிமை நான் சுவைத்தேன் - என் கரம்
திருவடி தொட நான் விழைகின்றேன்
இயேசுவே இறைவா மகிழ்கின்றேன் - உன்
தோழனாய் என்னை ஏற்றுக்கொண்டாய்
1. கருவினிலே எனைத் தெரிந்து கொண்டாய் - என்
உருவினிலே உந்தன் உருப் பதித்தாய்
கடந்திட்ட பாதையை நோக்குகின்றேன் - உன்
காலடிச் சுவடுகள் காண்கின்றேன்
என் கரம் பிடித்து நடத்திச் சென்றாய்
உன் வழியில் எனை நடத்திச் சென்றாய்
நன்மையின் நாயகன் நீயன்றோ
நன்றியால் உன் புகழ் பாடிடுவேன்
2. உறவுகள் என்னைப் பிரிந்திட்ட வேளை
உணர்ந்தேன் இருள் எனைச் சூழ்ந்தது போல்
சிலுவையின் நீரால் எனைத் தீண்டியவேளை
தென்றலின் இனிமை நான் சுவைத்தேன் - என் கரம்