முகப்பு


1273.மனம் வருந்தி மனம் திருந்தி உம்மைச் சரணடைந்தேன்
மனம் வருந்தி மனம் திருந்தி உம்மைச் சரணடைந்தேன்
என்னை ஏற்று மன்னித்தருள உம்மை வேண்டுகிறேன் - 2

1. கண்ணின் மணிபோல என்னைக் காத்தும் மண்ணில் வீழ்ந்தேனே
கோட்டை அரண் போல் என்னைக் காத்தும் தாண்டிப் போனேனே

2. நல்ல இதயம் எனக்குத் தந்தும் பகைமை கொண்டேனே
மன்னிக்கின்ற மனத்தைத் தந்தும் வெறுப்பில் வாழ்ந்தேனே

3. சகித்து வாழ பொறுமை தந்தும் சலித்துக் கொண்டேனே
ஏற்றுக்கொள்ளும் இதயம் தந்தும் உதறி எறிந்தேனே