முகப்பு


1295.குன்றின் மேலமர்ந்து மாபரன் இயேசு
குன்றின் மேலமர்ந்து மாபரன் இயேசு
மன்றினைப் பொழிந்து அறிவுரை தந்தார் - 2
அந்தக மாந்தர்க்குச் சீர்வழிக் காட்டிடச்
சிந்தையைத் தூண்டிடும் தேன்மொழி தந்தார் - 2

1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
எழில்மிகு விண்ணகம் அவர்களதே
துயரமுறுவோர் பேறுபெற்றோர்
அயரா ஆறுதல் மிகப் பெறுவர்
நீதியின் மைந்தர் நிறைவாழ்வு பெறுவர்
நீதி நல்வேந்தனின் தத்துவமன்றோ

2. சாந்தமுடையோர் பேறுபெற்றோர்
தாரணி முழுவதும் அவர்களதே
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்
இறைவனின் இரக்கம் மிகப் பெறுவர்
தூய மனத்தோர் கடவுளைக் காண்பர்
தூய நல்இயேசுவின் பொன்மொழியன்றோ