முகப்பு


1301.வாழ்வு தருவது இறைவார்த்தை
வாழ்வு தருவது இறைவார்த்தை - 2

1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே - 2

2. துயரமுள்ளோர் பேறுபெற்றோர்
ஆறுதலை அடைவார்கள் - 2

3. சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர்
மண்ணுலகு அவர் உரிமை - 2

4. நீதியில் நிலைப்போர் பேறுபெற்றோர்
நிறைவினையே பெறுவார்கள் - 2

5. இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்
இரக்கத்தையே பெறுவார்கள் - 2

6. தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்
இறைவனையே காண்பார்கள் - 2

7. சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்
இறைமக்களாய்த் திகழ்வார்கள் - 2

8. துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே - 2