முகப்பு


1327.நித்திய துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கே
நித்திய துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கே
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்

1. அல்பகலாத் தேவா அடைப்பட்டிருப்பது ஏன்
அடியோர் கவலை தீர்த்து ஆறுத லீந்திடவே

2. அன்பின் அவதாரமே இன்ப எம் சோதரமே
துன்புறும் இந்நேரமே வந்தோ முந்தன் பதமே

3. சீவிய அப்பமாக தேவனே இங்கெழுந்தீர்
பாவி எம் மீது கொண்ட பாசத்திற்கீடு முண்டோ

4. தாழ்ச்சிக்கொரு முடியாய் ஆட்சியிதில் புரிய
மீட்சிபுரி அப்பத்தை மேதினியோர்க் கீந்தீரே

5. வானோரதிசயமே ஈனோரெம் போசனமே
ஞானோர்கள் முப்பலமே ஞாலத்தின் பேர் தீபமே