முகப்பு


1353.உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு ஆசீரளிப்பார்
உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு ஆசீரளிப்பார்

1. ஆண்டவர்க்கஞ்சும் நீ பேறுபெற்றோன்
அவர் காட்டிய வழியில் நீ நடப்பாய்
உழைப்பால் நீ உந்தன் உணவைக் கொள்வாய்
எல்லாம் உனக்கு நலமாகும்

2. மக்களின் மக்களைக் காண்பீராக
உங்கள் வாழ்வினில் அமைதி நிலவிடுக
இறைவன் தரும் நல் சமாதானம்
என்றென்றும் உங்களில் நிலைத்திடுமே