முகப்பு


1355.மண வாழ்வு - புவி வாழ்வினில் வாழ்வு
மண வாழ்வு - புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு - 2

1. துணை பிரியாது தோகையிம்மாது
துப மண மகளிவர் இது போது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன முமதருள் பெறவேது - நல்ல

2. சீவ தயாகரா சிருசிடிய திகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லை யூரா
சேர்ந்தவர்க் கருள் தராதிருப்பீரா - நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சம்சாரம்
அடக்கமாசாரம் அன்பு உதாரம்
அம் புவிதனில் மனைக் கலங்காரம் - நல்ல

4. மணமகன் ...............................மணமகள் ....................................
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன முமதருள் பெறவேது - நல்ல

5. நலவாழ்வு புகழ் உணவு கல்வி
அறிவு செல்வம் மக்கட்பேறு அழகு
இeமை வலிமை வாழ்நாள் வெற்றி
பெருமை துணிவு நுகர்ச்சி நல்லூழ்
(பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க)