முகப்பு


1356.மூவோர் இறைவன் அன்பு உறவு
மூவோர் இறைவன் அன்பு உறவு
பூவினில் நமது குடும்ப வாழ்வு
ஆதி முதலே நன்றெனக் கண்டு
ஆண்டவர் தாமே அமைத்த படைப்பு
அன்பின் ஆலயம் குடும்பம் உறவின் சங்கமம் குடும்பம்
வளமிகு ஆன்மீகம் குடும்பம் பேரின்ப ஆரம்பம் குடும்பம்

1. ஆணும் பெண்ணுமாய் (மனிதரைப் படைத்தார்) - 2
அன்பு உறவை அவர்களில் விதைத்தார் - 2
குடும்ப வாழ்வைத் தொடக்கியே வைத்தார் - 2
குழுமம் எனவே வளர்ந்திடப் பணித்தார் - அன்பின்

2. கிறிஸ்து இயேசு போல (மணமகன் வாழ) - 2
திருஅவையெனவே மணமகள் ஒளிர - 2
திருமணம் என்னும் அருட்சாதனத்தில் - 2
இருமனம் இணையும் இல்லறம் வாழ்க