முகப்பு


1361.இயேசுவே எனக்கோர் ஆசை
இயேசுவே எனக்கோர் ஆசை
என் நெஞ்சில் உள்ள ஆசை
கேட்பாயோ அன்போடு என் அன்பு தேவ தேவா - 2

1. நெஞ்சுக்குள்ளே என்னவச்சு பூட்டிக்கொள்வாயா உன்
கண்ணுக்குள்ளே கருவிழியாய்ச் சேர்த்துக்கொள்வாயா
எண்ணமெல்லாம் கதை கதையாய்
நான் சொல்ல வேணும் என்றும் என்னருகில்
நீ இருந்து என் குறை போக்கணும்

2. காடுமலை மேடு எல்லாம் பூமியாகணும் - இந்த
சாதி மத பேதமெல்லாம் மாஞ்சி போகணும்
நம்பி வரும் மனிதரெல்லாம் வாழ்வு காணணும் - உனை
நாமணக்கப் பாடிப்பாடி நான் துதிக்கணும்