முகப்பு


1435.சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம்
சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம் - அவர்
அன்பே தவிர ஆணியில்லை
சாவை வென்றவர் உயிர்த்ததுவும் - அன்பின்
சக்தியைத் தவிர ஏதுமில்லை
சக மனிதனை அன்பு செய்தால் - இங்கே
சகலமும் சரியாகும் தோழா - 2 தோழா என் அன்புத் தோழா

1. தரணியில் இயேசுவாய்ப் பிறந்ததெல்லாம் - நம்மைத்
தாங்கும் இறைவனின் அன்பேதான்
இறப்பிலும் கூட இறைமகனும் - நமக்கு
உரைத்தது அன்பின் மகத்துவம்தான்
அன்பே இறைவன் என்றறிந்தால் - நம்
அகமே ஆலயம் எனத் தெளிவோம்
ஒருவரை ஒருவர் அன்பு செய்து - அங்கே
ஒன்றாய்த் தினமும் வழிபடுவோம் - சக மனிதனை

2. மனத்திற்குத் தேவை உடன் வாழும் - பிற
மனிதரின் அன்பே எனப் புரிந்தால்
என் தேவை என் ஆசை என்றெண்ணியே - இங்கு
எந்நாளும் அலையாத மனம் வாய்த்திடும் - அன்பே இறைவன்