முகப்பு


1446.என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்
என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்

1. எங்கள் முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பிக்கை வைத்ததால் அவர்களுக்கு விடுதலை அளித்தீர்
உம்மை நோக்கிக் கூவினார்கள் ஈடேற்றம் அடைந்தார்கள்
உம்மீது நம்பிக்கை வைத்தார்கள் ஏமாற்றம் அடையவில்லை

2. ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
நீரோவெனில் என்னைக் கருப்பையிலிருந்து வரச் செய்தீர்
தாயின் மடியிலேயே எனக்கு உறுதியான பாதுகாப்பாயிருந்தீர்

3. நானோவெனில் மனிதனேயல்ல புழுவுக்கு ஒப்பானேன்
மனிதரின் நிந்தனைக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானேன்
என்னைப் பார்ப்போர் எல்லோரும்
என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்