முகப்பு


1459.நம்பிக்கை தரும் சிலுவையே
நம்பிக்கை தரும் சிலுவையே
நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்
உன்னைப் போன்று தழை பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால்
இனிது தாங்கும் மரமே நீ

1. மாட்சி மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து
செயத்தின் கீதம் ஓதுவாய் - நம்பிக்கை

2. தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கைக் கண்டு நொந்த சிருசிடிகர்
மரத்தால் வந்தத் தீங்கை நீக்க
மரத்தை அன்றே குறித்தனர் - இனிய

3. வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின்
ஒழுங்கில் குறித்து இருந்தது - நம்பிக்கை

5. எனவே புனித கால நிறைவில் தேவபிதா தம் மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார் அன்னை கன்னி வயிற்றிலே
ஊன் எடுத்து வெளிவந்தாரே
மண்ணகத்தைப் படைத்தவர் - இனிய

6. இடுக்கமான முன்னட்டியிலே கிடந்து குழந்தை அழுகிறார்
தேவ உடலைத் துகிலில் பொதிந்து சுற்றி வைத்து கன்னித்தாய்
இறைவன் அவர்தம் கையும் காலும்
கச்சையாலே பிணைக்கின்றார் - நம்பிக்கை

7. முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின் காலம் நிறைவுற
மீட்பர் தாமாய் மனமுவந்து பாடுபடவே கையளித்தார்
சிலுவை மரத்தில் பலியாகிடவே
செம்மறி உயர்த்தப் படலானார் - இனிய

8. கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும்
அதனால் தூய்மை ஆயின - நம்பிக்கை

9. வளர்ந்த மரமே உன்கிளை தாழ்த்தி
விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின்
உயர்ந்த தணித்துத் தாங்குவாய் - இனிய

10. மரமே நீயே உலகின் விலையைத் தாங்கத் தகுதியாகிய கிளை
திருச்செம்மறியின் குருதி உன்மேல் பாய்ந்து, தோய்த்ததாதலால்
புகலிடம் நீ, படகும் நீ - நம்பிக்கை

11. பரம திருத்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம்
பிதாவும் சுதனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே
அவர்தம் அன்பின் அருளினாலே
நம்மைக் காத்து மீட்கின்றார் - ஆமென்.