முகப்பு


1499.ஒரு வெண்கொற்ற குடை நிழலில்
ஒரு வெண்கொற்ற குடை நிழலில் இவ்
வுலகாள் வேந்தன் வாழியவே பொருதும் படையும் போருமின்றி
இறைவன் அன்பின் நிறைவாலே
மக்கள் மனமாள் வேந்தன் வாழியவே

1. பரமனின் பிரதிநிதியாமே எங்கள் பாப்பரசரின் புகழ் இதுவாமே
ஒழுக்கமும் உண்மையும் உரைப்பாரே - அதில்
வழுவா வரம் அவர் துணையாமே
வெண் பொன்னிறம் அவர் கொடியாமே - ஒளிர்
மின்னலின் தூயதிவ் வரமாமே
மும்மகுடம் அவர் முடியாமே வளர் மூவுலகாள் அதிபதியாமே