முகப்பு


1500.சோபித சுந்தர உரோமை ராயனுக்கே
சோபித சுந்தர உரோமை ராயனுக்கே
சே சே பாடுவோமே

1. இந்நில மீதினில் நன்மை ரூபனே
எத்திசையும் சத்தியம் காக்கும் சுத்த வீரனே
இயேசுபரன் ஆசி பெற்ற எங்கள் ஆயனே - 2

2. மும்முடி சிரமதில் மின்னித் துலங்கிட
மூவகை ஆட்சி புரியும் மன்னர் மன்னனே
முதல் வனருளால் உலகையாளும் எங்கள் மகிபனே - 2

3. சுடரொளி சோதியாய் விளங்கும் அதிபனே
துய்யன் இயேசு தந்த வழியில் நடத்தும் தலைவனே
துதியும் புகழும் பெருக வாழி என்று பாடுவோம்