முகப்பு


1518.ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும் - 2
கிறிஸ்துவே இரக்கமாயிரும் - 2
ஆண்டவரே இரக்கமாயிரும் - 2
புனித மரியாயே, இறைவனின் தாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித மிக்கேலே - எங்களுக்காக
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக
புனித திருமுழுக்கு யோவானே - எங்களுக்காக
புனித யோசேப்பே - எங்களுக்காக
புனித பேதுருவே, புனித பவுலே - எங்களுக்காக
புனித அந்திரேயாவே - எங்களுக்காக
புனித யோவானே - எங்களுக்காக
புனித மகதலா மரியாவே - எங்களுக்காக
புனித ஸ்தேவானே - எங்களுக்காக
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக
புனித லாரன்ஸே - எங்களுக்காக
புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே - எங்களுக்காக
புனித ஆக்னஸே - எங்களுக்காக
புனித கிரகோரியே - எங்களுக்காக
புனித அகுஸ்தினே - எங்களுக்காக
புனித அத்தனாசியுஸே - எங்களுக்காக புனித பேசிலே - எங்களுக்காக
புனித மார்ட்டினே - எங்களுக்காக
புனித பெனடிக்டே - எங்களுக்காக
புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே - எங்களுக்காக
புனித பிரான்சிஸ் சவேரியாரே - எங்களுக்காக
புனித வியான்னி மரிய ஜானே - எங்களுக்காக
புனித சியன்னா கத்தரீனே - எங்களுக்காக
புனித அவிலா தெரேசே - எங்களுக்காக
இறைவனின் எல்லாப் புனிதரே புனிதையரே -
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
கனிவு கூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து - எங்களை
பாவம் அனைத்திலுமிருந்து - எங்களை
முடிவில்லாச் சாவிலிருந்து - எங்களை
உமது மனித உடலேற்பினாலே - எங்களை
உமது இறப்பினாலே, உமது உயிர்ப்பினாலே - எங்களை
தூய ஆவியாரின் வருகையினாலே - எங்களை

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

தேர்ந்துகொள்ளப்பெற்றஇவர்கள் திருமுழுக்கின் அருளினால்புதுப்பிறப்பு
அடையச் செய்தருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

உம் மக்களுக்கு புதுப்பிறப்பு அளிக்கும் இந்த நீரூற்றை உமது
அருளினால் புனிதமாக்க வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை
மன்றாடுகின்றோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்
கிறிஸ்துவே, கனிவாய்ச் செவிசாய்த்தருளும்

குருத்துவ அருள்பொழிவில்

உமது தூய திருஅவையை ஆண்டு காத்தருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருஅவைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும்
அனைவரையும் திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்ய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைத்துலக மக்களுக்கும் அமைதியும் மெய்யான
ஒற்றுமையும் தந்தருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உமது புனித ஊழியத்தில் எங்களை உறுதிப்படுத்திக் காத்தருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தேர்ந்துகொள்ளப் பெற்ற இவர்களை, ஆசீர்வதிக்க
வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தேர்ந்துகொள்ளப் பெற்ற இவர்களை ஆசீர்வதித்துப்
புனிதப்படுத்தி,அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உயிர்வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை
மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறித்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும் - 2
கிறித்துவே, தயவாய் செவிசாய்த்தருளும் - 2