முகப்பு


1493. புனிதர் திருவிழாக்கள்
புனிதர் திருவிழாக்கள்

1. இறைவனுடைய புனிதர்களே அவரை வாழ்த்துங்கள். அவருக்கு
அஞ்சுவோரே அவரது புகழ்பாடுங்கள். அல்லேலூயா.

2. நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நிறைவுபெறுவர். அல்லேலூயா.

3. தூயவரும் மாசற்றவருமாய் இருக்குமாறும் அன்பில் வாழவும்
நம்மைத் தேர்ந்துகொண்ட இறைவன்போற்றப் படுவாராக.
அல்லேலூயா.

புனிதர் ஒருவர் : தன் வீட்டைக் கற்பாறையின் மேல் கட்டிய அறிவாளிக்கு
அவர் ஒப்பானார். அல்லேலூயா.

புனிதர் பலர் : தமக்கு அஞ்சுபவர்களையும், தமது அன்பிரக்கத்தில்
நம்பிக்கை வைத்தவர்களையும் ஆண்டவர் கண்ணோக்கினார்.
அல்லேலூயா.

குரு : மன்றாடுவோமாக! இரக்கம் நிறைந்த இறைவா, வலுவற்ற நாங்கள்
மீட்பின் வழி நடக்க எங்களுக்கு இப்புனிதர்தம் வாழ்வின் தூண்டுதலையும்
ஆதரவையும் அளித்துள்ளீரே. புனித .............. உடைய வானகப்
பிறப்புநாளைக் கொண்டாடும் நாங்கள், அவருடைய வாழ்க்கையைக்
கண்டுபாவித்து, உம்மிடம் விரைந்து வரக் கனிவாய் அருள்புரியும்.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய்
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம்
திருமகனுமாகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.