முகப்பு


080. ஆவியிலும் உண்மையிலும் வாழ அழைக்குது
ஆவியிலும் உண்மையிலும் வாழ அழைக்குது
ஆயன் இயேசு தன்னை தந்த அன்பின் பலியிது
உயிரில் கலந்த பலியிது
உறவை வளர்க்கும் பலியிது
நெஞ்சில் நிகழும் பலியிது
என்றும் அழியா பலியிது - 2 ஆ... ஆ... ஆ...

1. இறைகுலமாய் இணைந்திட தவழ்ந்திடும் இறை பிரசன்னம்
ஒருடலாய் நம்மை மாற அழைக்குது
வார்த்தை பலியில் உறைந்திட எழுந்திடும் இறைபிரசன்னம்
நேர் வழியில் நம்மை வாழ அழைக்குது
வெள்ளமென இறையருள்
உள்ளமெல்லாம் நிறையுது - 2
வேற்றுமைகள் ஓடி மறையுது - உயிரில் கலந்த - ஆவியிலும் - 2

2. உள்ளம் சொல்லும் வேண்டலில்
பொங்கிடும் இறைபிரசன்னம்
அன்பு செய்ய நம்மை நாளும் அழைக்குது
நற்கருணை உணவினில் தங்கிடும் இறை பிரசன்னம்
அர்ப்பணிக்க நம்மை வாழ்வில் அழைக்குது
வாழ்வின் அர்த்தம் பலியினில்
ஆழ்மனதில் பதியுது - 2
பார்வையெங்கும் பாதை தெரியுது - உயிரில் - 2 ஆவியிலும் - 2