முகப்பு


081. ஆலயமணியின் அழைப்பினை ஏற்போம்
ஆலயமணியின் அழைப்பினை ஏற்போம்
ஆண்டவரின் இல்லம் சென்றிடுவோம்
ஆனந்தமுடனே பலியினில் இணைவோம்
அவர் வழி நடந்திடுவோம்
வருவோம் வருவோம் சந்நிதி வருவோம்
இறைகுலமாகவே இணைந்திடுவோம்
மகிழ்வோம் மகிழ்வோம் அன்பினில் மகிழ்வோம்
இறைவனின் வழியில் அமைதியை பெறுவோம்

1. உள்ளங்கள் இணைந்தே உறவுகளாவோம்
அருளில் நனைந்தே தூயவராவோம்
எல்லைகள் கடந்து அன்பினை பகிர்வோம்
எளியோர் வாழ்வினை மலரச் செய்வோம்
இறைவாக்கை இதயத்தில் ஏற்றிடுவோம்
நிறைவாழ்வு பயணத்தை தொடர்வோம்
நிறைவாழ்வு பயணத்தை இனிதாய் தொடர்வோம்

2. உரிமை இழந்தோர் உதயங்களாவோம்
உண்மை உருப்பெற உயிர் கொடுப்போம்
தேசங்கள் தோறும் நேசத்தை வளர்ப்போம்
பேதங்கள் இல்லா உலகமைப்போம்
நாடெங்கும் நற்செய்தி நாமாகுவோம்
நாடி வருவோரை நலமாக்குவோம் - நம்மை
நாடி வருவோரை நலமாக்கி மகிழ்வோம்