முகப்பு


85. ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த

1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த

2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த