முகப்பு


109. இறைகுலமாய் திருக்குலமாய்
இறைகுலமாய் திருக்குலமாய்
இறைவனில் இணைந்திடும் ஒரு தருணம்
அலை அலையாய் அன்புறவாய்
உன் ஆலயம் சேர்ந்திடும் பல இதயம்
புனித பலி உறவின் பலி
புது வாழ்வு தரும் அன்பின் பலி - 2

1. ஆலய மணியின் ஓசையிலே
சங்கமித்து கூடி வாருங்களே
ஆனந்தமாய் அன்புறவாய்
இறைவன் திருமுன் கூடிடுவோம் - 2
தலைவன் இயேசு வழியினிலே
தரணி எங்கும் சென்றிடுவோம் - 2
பகிர்வோம் உயர்வோம் பலியினில் இணைவோம்

2. உறவுகள் இணைந்திடும் தியாகத்தின் பலியில்
இணைவோம் இன்று ஒரு மனதாய்
மனிதம் மலர்ந்திட உறவுகள் நிலைத்திட
எழுவோம் இன்று ஓர் குலமாய் - 2
படைப்பு எல்லாம் பொது உடைமை
பகிர்ந்து வாழ்வது பெரும் கடமை - 2
பகிர்வோம் உயர்வோம் பலியினில் இணைவோம்