முகப்பு


121. இறைவன் அழைக்கும் நல் பலியிதுவே
இறைவன் அழைக்கும் நல் பலியிதுவே
இனிதாய் கலந்திடுவோம் - 2
புது உறவு மலர்ந்து புது வழியும் பிறந்து
இறை அருளில் நிறைய நம்மை அழைக்கின்றார் – 2
வருவோம் ஒன்றாய் இணைவோம் அன்பாய்
இனிய பலியில் இன்று கலந்திடுவோம் - 2

1. உன்னத பலியும் இதுவே
உயர்ந்த பலியும் இதுவே
புனித பலியும் இதுவே
புண்ணிய பலியும் இதுவே
தேவ நன்மைகள் நிறைந்த பலி
உண்மையை உணர்த்தும் பலி
வல்லமை வழங்கும் பலி
வருவோம் புகழ்வோம் - 2

2. அன்பின் சமூகம் அமைப்போம்
அருளில் நிறைந்து இணைவோம்
அவரின் குரலைக் கேட்போம்
இறை அழைப்பை ஏற்று வருவோம்
நிறை வளங்கள் வழங்கும் பலி
வலிமை பெருகும் பலி
மனிதம் மகிழும் பலி
எழுவோம் தொழுவோம் - 2