முகப்பு


126. இறைவன் ஆட்சி மண்ணில் மலர
இறைவன் ஆட்சி மண்ணில் மலர
இதயம் மகிழ்ந்து பகிர்ந்து வாழ
ஆயனாய் அன்பனாய் நன்மை அழைக்கிறார் -2
வாருங்கள்... கூடுங்கள்... அன்பில் நனைய
அருளில் வளர சேருங்கள் - 2

1. ஏழை மாந்தர் ஏக்கம் காண இறைவன் அழைக்கிறார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
எழுச்சி வாழ்வை பிறரில் விதைக்க அவரே விளைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
விழுகின்ற மனிதமும் அழுகின்ற இதயமும் ஆலயம் - 2 வாருங்கள்

2. வார்த்தையான தேவன் இன்று வாழ்வில் இணைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வளமை நிறைந்த குருதிதனை பருகத் தருகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
நலிந்திடும் மனிதமும் நொறுங்கிடும் இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் - 2 வாருங்கள்