முகப்பு


149. உன்னத இறைவனின் சாயலிலே
உன்னத இறைவனின் சாயலிலே
உலகினில் பிறந்த இறைகுலமே
இறைவன் அழைக்கின்றார் இனிதே
இணைந்திடுவோம்
பலியில் கலந்து நாம் மீட்படைவோம்
பரமன் அன்பில் நாம் கலந்திடுவோம் - 2

1. தாய் வயிற்றில் பெயர் சொல்லி நம்மை அழைத்த இறைவன்
தாய் சேயை அணைப்பதுபோல் நாளும் தேற்றும் தலைவன் - 2
நாமே உம் கடவுள் நீங்கள் என் மக்களென தெரிந்தார்
நம்மை தெரிந்தார் புது உடன்படிக்கை அமைத்தார்
வாழ்வோம் இறைகுலமாய் அவர் அன்பின் சாட்சிகளாய் – 2

2. வாழ்வு பெற நிறைவாழ்வு பெற தன்னை ஈந்த தலைவன்
தடை வரினும் துயர் வரினும் துணையாய் நின்ற இறைவன் - 2
ஆண்டவர் என் ஆயன் எனக்கொரு குறையுமில்லை - என சொல்வோம்
நாம் செல்வோம் என்றும் அவரின் வழியில் செல்வோம்
வாழ்வோம் இறைகுலமாய் அவர் அன்பின் சாட்சிகளாய் - 2