150. எனையாளும் இறைவா உன் கழல் பணிந்தேன்
எனையாளும் இறைவா உன் கழல் பணிந்தேன்
உன் நினைவாலே என் வாழ்வில் நிறைவடைந்தேன்
கனிந்து வா துயில் களைந்து வா
எனை நினைத்து வா எழில் புனைந்து வா
1. ஆவலை தருகின்ற ஆறமுதே - ஒரு
அன்னையாய் எனை பேணும் அன்புருவே
காவலை தருகின்ற பேரரசே - எந்தன்
கவலையை தீர்த்திடும் கார்முகிலே
2. வானென விரிந்துள்ள வல்லமையே - எந்தன்
வறுமையில் மருந்தாகும் நல்லருளே
தேனென இனிக்கின்ற செங்கனியே - எந்தன்
சிந்தையில் சுவைக்கின்ற செந்தமிழே
உன் நினைவாலே என் வாழ்வில் நிறைவடைந்தேன்
கனிந்து வா துயில் களைந்து வா
எனை நினைத்து வா எழில் புனைந்து வா
1. ஆவலை தருகின்ற ஆறமுதே - ஒரு
அன்னையாய் எனை பேணும் அன்புருவே
காவலை தருகின்ற பேரரசே - எந்தன்
கவலையை தீர்த்திடும் கார்முகிலே
2. வானென விரிந்துள்ள வல்லமையே - எந்தன்
வறுமையில் மருந்தாகும் நல்லருளே
தேனென இனிக்கின்ற செங்கனியே - எந்தன்
சிந்தையில் சுவைக்கின்ற செந்தமிழே