முகப்பு


170. நல்ல நாள் வந்தது நன்மையே தந்தது
நல்ல நாள் வந்தது நன்மையே தந்தது
நாதன் அழைக்கின்றார்
நன்மையே தந்திட சந்நிதி வந்திட
தேவன் அழைக்கின்றார் - 2
வாருங்கள் கூடுவோம் வல்லமை தேவன் நம்மில் இணைந்திட - நல்ல

1. ஆண்டவர் வாக்கு நம்பத்தக்கது அவரிடம் அடைக்கலம் புகுவோம்
அடைக்கலம் புகுந்திடும் அன்பு உள்ளங்கள் அவரது கேடயம் ஆகும் - 2
மனமே தினமே இறைவன் வசமே நன்றி பலிதருவோம்
நீரே அரசர் நீரே கடவுள் என்று புகழ் உரைப்போம்
பாவங்கள் போக்கிட பாரில் இயேசு அழைக்கும் நேரமே - நல்ல

2. தேவன் வாசலில் கால்கள் பட்டதும்
தீமைகள் விலகி போகும்
தேடும் அமைதியை தெய்வம் தந்திடும்
திருநாள் இன்றே காண்போம் – 2
வருவோம் இணைவோம் புகழ்வோம் மகிழ்வோம்
நாளும் பண்பாடுவோம்
இரவும் பகலும் இன்பம் நீயே என்று போற்றிடுவோம்
தாகங்கள் தீர்த்திட தரணியில் இயேசு அழைக்கும் நேரமே - நல்ல