181. புத்தம் புது கனவுடன்
புத்தம் புது கனவுடன்
புத்தம் புது வாழ்வுக்காய்
நித்தம் நம்மை அழைக்கிறார் இறைவன்
சித்தம் கண்டு செயல்பட்டு
சத்தியம் கண்டு நடைபோட்டு
அனைத்தையும் புதியது ஆக்கிடுவோம் - 2
1. தெய்வீக நாதம் நெஞ்சில் முழங்கட்டுமே
ஏற்றத் தாழ்வுகள் வேரறுமே
வற்றாத நீதி ஊற்று பிறந்திடுமே
தீமை உலகினில் சாய்ந்திடுமே
சுயநலப் பேயாறு வற்றி விடுமே
பிறர்நலத் தேனாறு பாய்ந்து வருமே - 2
இறையாட்சி பாரெங்கும் நிலைபெறுமே
2. நெஞ்சார தேவன் நாமம் பாடிடுவோம்
வாழ்வாலே அவர் புகழ் சாற்றிடுவோம்
வாழ்விக்கும் இறை தர்மம் மலர்வதனால்
எவ்வுயிரும் தீங்கின்றி வளர்ந்திடுமே
கண்ணுக்குள் நிலவொன்று தோன்றிடுமே
கண்ணாக உலகத்தைக் காக்க வருமே - 2
கணக்கில்லா அருள் வரம் தந்து தேற்றுமே
புத்தம் புது வாழ்வுக்காய்
நித்தம் நம்மை அழைக்கிறார் இறைவன்
சித்தம் கண்டு செயல்பட்டு
சத்தியம் கண்டு நடைபோட்டு
அனைத்தையும் புதியது ஆக்கிடுவோம் - 2
1. தெய்வீக நாதம் நெஞ்சில் முழங்கட்டுமே
ஏற்றத் தாழ்வுகள் வேரறுமே
வற்றாத நீதி ஊற்று பிறந்திடுமே
தீமை உலகினில் சாய்ந்திடுமே
சுயநலப் பேயாறு வற்றி விடுமே
பிறர்நலத் தேனாறு பாய்ந்து வருமே - 2
இறையாட்சி பாரெங்கும் நிலைபெறுமே
2. நெஞ்சார தேவன் நாமம் பாடிடுவோம்
வாழ்வாலே அவர் புகழ் சாற்றிடுவோம்
வாழ்விக்கும் இறை தர்மம் மலர்வதனால்
எவ்வுயிரும் தீங்கின்றி வளர்ந்திடுமே
கண்ணுக்குள் நிலவொன்று தோன்றிடுமே
கண்ணாக உலகத்தைக் காக்க வருமே - 2
கணக்கில்லா அருள் வரம் தந்து தேற்றுமே