முகப்பு


184. புதுயுகம் பிறந்திடும் நேரத்திலே
புதுயுகம் பிறந்திடும் நேரத்திலே
மலர்ந்திடும் புதுவாழ்வு – 2
புதியதோர் உலகம் படைத்திடவே
புறப்படு இறைக்குலமே
ஆஹா... ஆர்ப்பரிப்போம் இன்று அகமகிழ்வோம்
இறைவனைப் புகழ்ந்திடுவோம் - 2

1. நம்மைப் படைத்து பாதுகாக்கும்
தந்தையின் அன்பு மேலான அன்பு
உயிர் தந்து நமை மீட்கும்
இயேசுவின் அன்பு மாறாத அன்பு
வரம் பொழிந்து வழிநடத்தும்
ஆவியின் அன்பு நிலையான அன்பு - 2
மூவொரு இறைவன் பகிரும் அன்பை நாம் பகிர்வோம் - 2
உலகம் நம்மை அவரின் சீடராய் அறிந்து கொள்ளும் - 2

2. இறைமனிதம் ஒன்று சேரும்
பலியினில் இணைவோம் நிறைவாக வாழ
இறைவார்த்தை வழி நின்று
பணிதனை செய்வோம் இயேசுவைப் போல
இறையாட்சி உலகினிலே மலர்ந்திட நாமும்
தினம் தினம் உழைப்போம் - 2
பிரிவினை பேதங்கள் யாவையும் இன்று நாம் களைவோம் - 2 மனிதரின் முன்னே சாட்சியாய் இங்கு நாம் வாழ்வோம் - 2