முகப்பு


196. வரம் வேண்டும் வரம் வேண்டும் வரம் வேண்டுமே - இறைவா
வரம் வேண்டும் வரம் வேண்டும் வரம் வேண்டுமே - இறைவா
நிதம் வேண்டும் நிதம் வேண்டும் நாம் வாழவே
வான் தந்தை போலே நிறைவாழ்வு வாழ
தூய ஆவி துணையோடு புதுவாழ்வு காண - வரம் வேண்டும்

1. என் உடலின் உயிர் மூச்சு நீ தந்தது
நான் தாங்கும் உன் சாயல் நீ தந்தது - 2
எனக்குள்ளதெல்லாமே நீ தந்தது - அதன்
பதிலாக நலம் வாழ மனம் ஏங்குது

2. பொழிகின்ற வானம் நீ தந்தது
விளைகின்ற பூமியும் நீ தந்தது - 2
நான் தேடும் வளம் யாவும் நீ தந்தது - நிதம்
உனக்காக எனை இழக்க மனம் ஏங்குது