முகப்பு


198. வரம் வேண்டி அருள் தேடி
வரம் வேண்டி அருள் தேடி
இன்று விரைகின்றேன்
உன்னை நாடி இசை பாடி

1. இன்னொளி பிறக்கும் வேய்குழல் நான் – எனை
அன்புடன் கரத்தில் ஏந்துகின்றாய்
இதழ் மலர் வைத்து இசைக்கின்றாய் - எனில்
இதமாய் கீதங்கள் எழுப்புகின்றாய்

2. நின்கரம் எனையே தீண்டியதும் - நான்
இன்பத்தின் எல்லையைத் தாண்டுகிறேன்
நன்றியும் மகிழ்வும் பொங்கிடவே - நான்
இன்னிசை மழையை பொழிகின்றேன்

3. என்பும் தசையும் வருகிடவே - உன்
அன்பை நாளும் பாடிடவே
எனையே இசையாய் மாற்றிவிடு - உன்னை
என்றுமே பாடியே போற்றவிடு