1357.அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
ஒன் செல்லப்பிள்ளை வந்துருக்கேன்
சேர்த்துக்கொள்ளுங்க
1. காசு பணம் பாவ சுகம் வேண்டாமையா
ஒன் காலடியில் தூசுபோல கெடந்தா போதும்
வேறங்கேயும் போக மனசில்லப்பா - ஒரு
வேலைக்காரன் போல கூட இருந்தா போதும்
2. கூச்சப்பட்டு நான் ஒங்க முகம் பார்க்கவே
முழுமனசா வந்து முத்தமிட்டீங்க
பார்த்துக்கிட்டீங்க என்ன பரிவோடவே
பாசத்துக்கு எப்போதும் நீங்கதானே
3. ஏதேதோ இன்பமென அலைந்தேனையா
எல்லாமே நீதான்னு புரிஞ்சிகிட்டேன்
காயப்பட்டீங்க என்னை கரம் சேர்க்கவே
புரிஞ்சிகிட்டேன் ரொம்ப தாமதமாகவே

1358.அன்பு இயேசுவே என் செல்ல இயேசுவே
அன்பு இயேசுவே என் செல்ல இயேசுவே
சின்ன சின்ன ஆசை சொல்லவா
என் பிஞ்சு உள்ளமே உன் தஞ்சம் கொள்ளவே
மார்போடு என்னைச் சேர்க்கவா - உன் - 2
1. நான் பேசும் மொழியாக நீ வேணுமே
நான் போகும் வழியாக நீ வேணுமே
நான் பார்க்கும் முகமாக நீ வேணுமே
நான் தேடும் உறவாக நீ வேணுமே
என் இதயம் நீ தங்கும் ஒரு கோயிலாக வேணுமே - 2
2. நான் சொல்லும் செபமாக நீ வேணுமே
நான் பாடும் பாடலாக நீ வேணுமே
என் ஆன்ம உணவாக நீ வேணுமே
என் ஆன்ம பானமாக நீ வேணுமே

1359.ஆயன் இயேசு கூட இருக்க எனக்குக் கவலையில்ல
ஆயன் இயேசு கூட இருக்க எனக்குக் கவலையில்ல
கையப் புடிச்சுக் கூட நடக்க யாரும் தேவையில்ல - 2
1. அமைதி நீர் நிலைக்கு என்னை அழைத்துச் சென்றிடுவார்
பசும்புல் தினம் எனக்குப் பரமன் தந்திடுவார்
2. இருட்டு பயமில்ல எனக்கு எதிரி பயமில்ல
கோலும் கைத்தடியும் எனக்குக் காலமும் இருக்கும்

1360.இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
நான் எப்போதும் உங்ககூட இருக்க ஆசைதான் - 2
1. உங்க மடியில் கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் - 2
நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் - 2
2. உங்கக்கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் - 2
நான் உங்களோட வார்த்தைகளைக் கேட்க ஆசைதான் - 2
3. உங்க அன்பு நானும் தினம் வாழ ஆசைதான் - 2
நான் உங்களோட செல்லமாக மாற ஆசைதான் - 2

1361.இயேசுவே எனக்கோர் ஆசை
இயேசுவே எனக்கோர் ஆசை
என் நெஞ்சில் உள்ள ஆசை
கேட்பாயோ அன்போடு என் அன்பு தேவ தேவா - 2
1. நெஞ்சுக்குள்ளே என்னவச்சு பூட்டிக்கொள்வாயா உன்
கண்ணுக்குள்ளே கருவிழியாய்ச் சேர்த்துக்கொள்வாயா
எண்ணமெல்லாம் கதை கதையாய்
நான் சொல்ல வேணும் என்றும் என்னருகில்
நீ இருந்து என் குறை போக்கணும்
2. காடுமலை மேடு எல்லாம் பூமியாகணும் - இந்த
சாதி மத பேதமெல்லாம் மாஞ்சி போகணும்
நம்பி வரும் மனிதரெல்லாம் வாழ்வு காணணும் - உனை
நாமணக்கப் பாடிப்பாடி நான் துதிக்கணும்

1362.என் இயேசு நீ வரவேணும் எனக்காக நீ வரவேணும்
என் இயேசு நீ வரவேணும் எனக்காக நீ வரவேணும் - 2
சீக்கிரமா நீ வரவேணும் நான் சிரிச்சுப் பேசி மகிழ வேணும்
உன் பிள்ளை எனை நீ - 2 ஆசீர்வதிக்க வேணும் - 2
1. கேளுங்கள் தருவேனென்னு சொன்னது நீதானே - 2
நான் கேட்கிறது உன் வார்த்தை மட்டும்தானே - 2
என்னோடு நீயிருந்தா ஆடி ஓடி மகிழ்வேன்
என்னோடு நீயிருந்தா பாட்டுப் பாடிச் சிரிப்பேன்
2. தேடுங்க கிடைக்குமுனு சொன்னது நீதானே - 2
நான் தேடுறது உன் அன்ப மட்டும்தானே - 2
என்னோடு நீயிருந்தா
தட்டுங்க திறப்பேனென்னு சொன்னது நீதானே - 2
நான் தட்டுறது உன் வீட்ட மட்டும் தானே - 2 -என்னோடுநீயிருந்தா

1363.என்னோட ஆசைய உங்கிட்ட சொல்லுறேன்
என்னோட ஆசைய உங்கிட்ட சொல்லுறேன்
கேக்கணும் இயேசப்பா
என்னோட நண்பன் உன்னோட
நானும் பேசணும் இயேசப்பா - 2
1. நான் கண்ணு முழிக்கும் போது ஒன் மொகத்த பாக்க வேணும்
நான் காதில் கேட்பதெல்லாம் ஒன் வார்த்தையாக வேணும்
ஒன்னோட நௌப்புல நான் தெனமும் வாழ வேணும்
ஒன்னோட மடியில நான் இப்போ அயர்ந்து தூங்க வேணும்
2. இப்போ நல்ல வெதையா நானும் ஒன் அருளில் மாற வேணும்
இந்த நாளில் நல்ல செய்தி நான் எங்கும் சொல்ல வேணும்
என்னோட பகைவருக்கும் நான் ஒதவி செய்ய வேணும்
ஒன்னோட சாட்சியாக என் வாழ்வு மாற வேணும்

1364.என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே
என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதையா - 2
1. ஒன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் - 2
எப்போதும் நான் இருப்பேன் என்று சொல்லவும் வேணும் - 2
2. நான்திரும்புற திசையெல்லாம் ஒன் உருவம் தெரிய வேணும்- 2
திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் - 2
3. ஒன் கையப் புடிச்சு நானும் கா லாற நடக்க வேணும் - 2
கலங்குற ஏங்கண்ண ஒன் கரமே தொடைக்க வேணும் - 2

1365.காலையில கண்விழிச்சு எழுந்ததுமே
காலையில கண்விழிச்சு எழுந்ததுமே
இயேசுவே உங்கள நௌப்பேன்
இரவில உறங்கிடப் போகும் முன்னே
இயேசுவே உங்கள நௌப்பேன்
கை கூப்பி நான் கண் மூடி கவலையில்லாம வேண்டுவேன்
நான் ஆசையோடு கேக்குறத எப்போவுமே தந்திடுங்க
1. இயேசுவே உங்கள ரொம்ப புடிக்கும் பேசிட ஆசை துடிக்கும்
அழகான உங்களோட பேரு புடிக்கும்
சொல்லிச் சொல்லிப் பாக்க நினைக்கும்
கொஞ்ச நேரம் இப்ப பேசட்டுமா
கொஞ்சும் கிளி போலப் பாடட்டுமா
என் மேலதான் நீங்க வச்சிருக்கும்
பாசம் ஏன்தான்னு சொல்லுங்களே
2. என்னோட நண்பர்களைக் கூட்டிவாரேன்
எல்லோருமே விளையாடுவோம்
உங்களோட சேந்து ஆட்டம் போடுவோம்
ஊரெல்லாம் சுத்தி வருவோம்
பள்ளிக்கூடம் நாங்க போகும்போதும்
துள்ளித் துள்ளி விளையாடும்போதும்
எங்களோட நீங்க இருந்திட்டா தினம் ஆனந்தம் ஆனந்தமே
3. அம்மாவையும் அப்பாவையும் ஆசீர்வதிங்க
அனுதினம் உதவிடுங்க
ஆபத்தில கூப்பிடும் எல்லாரையும்
கைவிடாமக் காப்பாத்திடுங்க
யாருமில்லா ஏழைப் பிள்ளைகளின்
ஆறுதலா நீங்க இருந்திடுங்க
பாசத்துக்காக ஏங்கும் பிள்ளைகளே இங்கு ஏராளம் ஏராளமே

1366.குழந்தை மனம் வேண்டும் இறைவா
குழந்தை மனம் வேண்டும் இறைவா
குழந்தை மனம் வேண்டும் - 2
1. மதம் இனம் மொழி பேதங்கள் தெரியா
குழந்தை மனம் வேண்டும்
சமத்துவம் அன்பில் நாளும் மலர்ந்திடும் - குழந்தை
பகைமை கயமை சிறிதும் அறியா - குழந்தை
மன்னித்து மறக்கும் பண்பொன்றே கொண்டிடும் - குழந்தை
2. மண்ணக வாழ்வின் மாண்பினைக் காத்திட - குழந்தை
விண்ணக வாழ்வை இகமதில் கண்டிட - குழந்தை
வான்புகழ் இயேசுவின் நல்லாசீர் பெற்றிட - குழந்தை
வானக அரசின் திறவுகோல் அடைந்திட - குழந்தை

1367.சின்னச் சின்ன ஆட்டுக் குட்டி நானையா
சின்னச் சின்ன ஆட்டுக் குட்டி நானையா
மெல்ல மெல்ல நடத்திடு இயேசையா - 2
இயேசையா என் இயேசையா - 4
1. குளிர்ந்த நீர் உள்ளதோர் ஓடையின் அருகே
என்னை வழி நடத்தும் என் இயேசையா - 2
பசுமை நிறைந்த வயல்களின் நடுவே
என் கரம் எடுத்தெம்மை நடத்துமையா - 2
இயேசையா என் இயேசையா - 4
2. இருள்நிறை பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உன் கரம் என்னையே வழிநடத்தும் - 2
எனக்கென உள்ளதோர் ஆசை ஒன்று
உன் இல்லம் நான் வந்து சேரவேண்டும் - 2

1368.பாசத்தோடு தேடி வந்த இயேசுவே எந்தன்
பாசத்தோடு தேடி வந்த இயேசுவே எந்தன்
பாவங்களைப் பொறுத்தருள்வாய் இயேசுவே - 2
1. கடமைதனை மறந்துவிட்டேன் இயேசுவே
காலத்தை வீணடித்தேன் இயேசுவே - 2
2. பெற்றோரை மதிக்கவில்லை இயேசுவே
பெரியோர் சொல் கேட்கவில்லை இயேசுவே - 2
3. சுயநலத்தில் வாழ்ந்து வந்தேன் இயேசுவே
என் சுகத்தை மட்டும் பார்த்துக் கொண்டேன் இயேசுவே - 2
4. செபம் செய்ய மறந்துவிட்டேன் இயேசுவே
உமக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன் இயேசுவே - 2