1138.இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம்
இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் - 2
ஓராயிரம் நெஞ்சம் புகழும்
இதயத்தின் வேந்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி
ஓராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம்
1. கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம்
சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம்
தொலைந்த ஆட்டைத் தேடி மகிழும் ஆயன் இதயம்
திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம்
நம் இயேசுவின் அன்பு இதயம்
2. சிலுவைப் பாடுகள் வழியே மீட்பு நல்கும் இதயம்
மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம்
நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம்
பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம்

1139.இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்துத் தொங்கிடும் காட்சி மனத்தில் நில்லாதோ
1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு - 2
கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு
2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு - 2
சிலை என பிரமையில் நிறுத்திடும் அன்பு

1140.இயேசுவின் இருதயமே எங்கும் நிறைந்திடும் அருள்மயமே
இயேசுவின் இருதயமே எங்கும் நிறைந்திடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2
1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2
2. கடவுளின் கருணை உண்டு - அந்த
கருணைக்கு உருவம் உண்டு - 2
அவர் உருவத்தில் உதித்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

1141.இயேசுவின் திருஇருதயமே
இயேசுவின் திருஇருதயமே
என் முழு நம்பிக்கை உம்மேலே - 2
1. உனைப் பிரிந்த நாளிலெல்லாம்
என் உள்ளத்தில் வாட்டம் கண்டேன் - 2
உம்முடனே இனி என்றும் உயிராய் இணைந்திருப்பேன் - 2
இயேசுவே சரணம் என்பேன் என்னில் வாழ்வது நீயென்பேன்
2. அமைதி எங்கே அமைதி எங்கே
அலைந்தேன் தருவாரில்லை (தேடி) - 2
அமைதி தரும் திரு இதயம் உனை அறிந்தும் அணுகவில்லை - 2
நீ என்னைத் தேடி வந்தாய் நெஞ்சில் நிம்மதி எனக்குத் தந்தாய்

1142.இயேசுவின் மதுர திருஇருதயமே
இயேசுவின் மதுர திருஇருதயமே
சிநேகத்தின் இருதயமே
தினமும் நீர் எங்கள் சிநேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே
1. மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க மனுமகனாய்ப் பிறந்தார்
மகிமை பிரதாப கடவுளால் உன் மாபலி நீ சுமந்தாய்
கள்ளனைப் போலக் கசடர்கள் கடுஞ்சிலுவையில் அறைந்தார்
கருணையால் உந்தன் இருதய அன்பின் தயவால் கண்டறிவார்
2. உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய் உனக்கென வைத்தாயோ
ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய் ஓங்கிய இருதயமே
இன்றும் எம்மோடு இருந்தருள் ஈவாய் இனியநல் உணவாக
இவையெல்லாம் பாரா வீணர்கள் நாங்கள் இருந்துமே பழித்தோமே
நன்மைமேல் நன்மை என்றும் நீ செய்வாய்
நாங்களோ தீமை செய்தோம்
நன்றியில்லாமல் உன் தயை மறந்தோம்
நாடியைப் போலன்றோ

1143.எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே
எல்லாம் உமக்காக - 2
1. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2
உன் புகழ் அதிமிக மகிமைக்கே
2. ஒளியை நோக்கா மலரில்லை நீரை நோக்கா வேரில்லை - 2
உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2
வாழ்வில்லை அதில் பயனில்லை

1144.என்ன இனிமை உன்னை நினைத்தால்
என்ன இனிமை உன்னை நினைத்தால்
இயேசுவின் இருதயமே - 2
என்னையே ஆளும் மன்னன் நீயே
இயேசுவின் இருதயமே - 2
1. கனலாய் எரிந்து அலையாய்ப் பரவும் இயேசுவின் இருதயமே - 2
புனலாய்ச் சுரந்து புனிதம் வளர்க்கும் இயேசுவின் இருதயமே - 2
2. தூயவர் வாழும் ஆலயமாகும் இயேசுவின் இருதயமே - 2
பாவியர் தேடும் புகலிடமாகும் இயேசுவின் இருதயமே - 2

1145.என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய்
என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய்
உன் சுமைகளை என் மீது இறக்கிடுவாய் - 2
தோளுக்கு வலிமை மனத்துக்கு மகிழ்ச்சி
வாழ்வினில் அமைதியை நான் தருவேன் - 2
1. கனிந்த என் முகத்தை நோக்கிடுவாய்
சாந்தமும் தாழ்ச்சியும் கண்டிடுவாய் (2)
இனி கவலை வருத்தம் சுமைகளெல்லாம் - 2
குறைந்து மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் - 2
2. நீர் எங்குச் சென்றாலும் உடன் நடப்பேன்
தொடங்கிடும் பணிகளில் துணையிருப்பேன் - 2
என் ஆவியின் அருள் கொண்டு பலமாக்குவேன் - 2
இருகரம் விரித்து உனை அழைப்பேன்

1146.கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும்
கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும்
கிறிஸ்துவின் தேகமே என்னை இரட்சியும்
கிறிஸ்துவின் இரத்தமே என்னை பூர்ப்பியும்
திருவிலாத் தீர்த்தமே என்னைத் தூய்ப்பியும்
1. கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட
அருள் நிறை இயேசுவே என்னைக் கேட்டிடும்
அரிய காயங்களுள் என்னை வைத்திடும்
பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும்
2. பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும்
மரண வேளையினில் என்னைக் கூப்பிடும்
பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே
வருக என்றன்போடு என்னை ஏவிடும்

1147.நம்மை அன்பு செய்யும் இதயம் என்றும்
நம்மை அன்பு செய்யும் இதயம் என்றும்
அரவணைக்கும் இதயம் - 2
நம் இயேசுவின் தூய இதயம் - 2 இதயம் - 2
நம் இயேசுவின் தூய இதயம் - 2
1. ஏழை எளியேஸருக்கு இறையரசை வாக்களித்த இதயம்
துயருறுவோர்க்கு ஆறுதல் அளிக்கும் இதயம் - 2
கனிவோடு பணிவிடை செய்யப் பணித்த நல் இதயம் (நம்மை)
இரக்கம் மிகுந்தோர்க்கு இரக்கமளிக்கும் இதயம்
- நம் இயேசுவின்
2. தூய உள்ளம் கொண்டோர்க்குத் தரிசனம் தரும் இதயம்
நீதிக்காய் உழைப்போர்க்கு நிறைவு அளிக்கும இதயம் (2)
அமைதியை அவனியில் விதைக்கப் பணித்த நல் இதயம் (நம்மை)
சுமை சுமந்து சோர்ந்தோர்க்கு இளைப்பாறுதல் தரும் இதயம்