முகப்பு


1448.நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்
நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்
கிறித்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதன்றோ!

1. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்!
மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து
ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்

2. ஆண்டவர் தம் அடியாரின் மரணம்
அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
ஆண்டவரே நான் உம் அடியேன், உம் அடியாரின் மகன்,
என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்

3. புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்
ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்
ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்
அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்
1449.புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன்
புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன்
உங்களுக்கு நான் அன்பு செய்தது போலவே
நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்
என்றுரைக்கின்றார் எம் பெருமான் இயேசு
1450.அன்பும் நட்பு எங்குள்ளதோ
அன்பும் நட்பு எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்

1. கிறித்துவின் அன்பு நம்மையெல்லாம்ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் - யாம் அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

2. சீவிய தேவனுக் கஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத் துடனேயாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்

3. எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனத்தில்வேற்றுமைகொள்ளாமல்விழிப்பாய்இருந்துகொள்வோமே

4. தீய சச்சரவுகள் ஒழிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன் கிறித்து நாதர் இருந்திடுக

5. முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறித்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே

6. முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய பேரானந்தம் இதுவேயாம்
1451.ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்.
சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது :
‘‘ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?’’
அதற்கு இயேசு : ‘‘நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை’’ என்றார்.
‘‘நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது பின்னரே விளங்கும்’’
‘‘ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?’’
அதற்கு இயேசு : ‘‘நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை’’ என்றார்
1452.பாதங்களைக் கழுவினார் இயேசு
பாதங்களைக் கழுவினார் இயேசு - 2
இயேசு பாதங்களைக் கழுவினார் பன்னிரு சீடரைப் பந்தியிலமர்த்தி
தன்னிரு கைகளில் தண்ணீர் கொண்டு

1. தான் என்ற குணத்தால் தனதென்ற மனத்தால்
தலைக்கனம் மீறிட இடமளிக்காமல் - 2
வாக்கிலும் செயலிலும் தாழ்ச்சியைக் கொண்டு - 2
நோக்கிலும் வாழ்விலும் உயர்வோம் என்று(ணர்த்த) - 2

2. பணிவிடை பெறவே வரவில்லை நானும்
பணிவிடை புரியவே உம்மிடை வந்தேன் - 2
என்றவர் சொன்ன வார்த்தையின் படியே - 2
இன்றவர் தான் ஓர் ஊழியர் போல
1453. ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம்
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் - 2

1. இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே
இழப்பதைவாழ்வென ஏற்றிடும்இலட்சியம்இறுதியில்வெல்லுமே- 2
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே - 2
நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம் - 2
நாளைய உலகின் விடியலாகவே

2. பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே புனிதமாய் நிலைத்ததே - 2
இயேசுவின்பலியும்இறப்பும்உயிர்ப்பும்இறையன்பின்சாட்சிகளே-2
இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் - 2
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே