முகப்பு


1498.உரோமை இராச பூபனே நமோ நமோ
உரோமை இராச பூபனே நமோ நமோ - 2
திருச்சபையின் தலைவராக செனித்த மாதவா - 2
உம்மை நாடித் தேடி நமசுகரிக்கின்றோம் - 2

1. உலகப் பாசம் ஒழிக்க சற்பிரசாதனே - 2
உமையல்லாது துணையும் ஏது உதவி செய்குவாய் - 2
உம்மை நாடித் தேடி நமசுகரிக்கின்றோம் - 2
1499.ஒரு வெண்கொற்ற குடை நிழலில்
ஒரு வெண்கொற்ற குடை நிழலில் இவ்
வுலகாள் வேந்தன் வாழியவே பொருதும் படையும் போருமின்றி
இறைவன் அன்பின் நிறைவாலே
மக்கள் மனமாள் வேந்தன் வாழியவே

1. பரமனின் பிரதிநிதியாமே எங்கள் பாப்பரசரின் புகழ் இதுவாமே
ஒழுக்கமும் உண்மையும் உரைப்பாரே - அதில்
வழுவா வரம் அவர் துணையாமே
வெண் பொன்னிறம் அவர் கொடியாமே - ஒளிர்
மின்னலின் தூயதிவ் வரமாமே
மும்மகுடம் அவர் முடியாமே வளர் மூவுலகாள் அதிபதியாமே
1500.சோபித சுந்தர உரோமை ராயனுக்கே
சோபித சுந்தர உரோமை ராயனுக்கே
சே சே பாடுவோமே

1. இந்நில மீதினில் நன்மை ரூபனே
எத்திசையும் சத்தியம் காக்கும் சுத்த வீரனே
இயேசுபரன் ஆசி பெற்ற எங்கள் ஆயனே - 2

2. மும்முடி சிரமதில் மின்னித் துலங்கிட
மூவகை ஆட்சி புரியும் மன்னர் மன்னனே
முதல் வனருளால் உலகையாளும் எங்கள் மகிபனே - 2

3. சுடரொளி சோதியாய் விளங்கும் அதிபனே
துய்யன் இயேசு தந்த வழியில் நடத்தும் தலைவனே
துதியும் புகழும் பெருக வாழி என்று பாடுவோம்
1501.இதோ பெரிய குரு வருகின்றார்
இதோ பெரிய குரு வருகின்றார் - 4
இறைவனுக்குகந்தவர் வருகின்றார் - 2

1. இவர்க்கிணையாக இறைசொல்லை
ஏற்று நடப்பவர் வேறில்லை - 2
எனவே அவர் தம் கோத்திரத்தில்
இனிதே செழிப்புற ஆணையிட்டார்

2. எல்லாக் குலத்து மாந்தர்களின்
ஆசீர் ஆண்டவர் அவர்க்களித்தார் - 2
அவர்தம் சிரசின் மேலேதம்
உடன்படிக்கை தனை நிலைக்கச் செய்தார்
1502.வாழ்ந்திடவே எங்கள் திருத்தந்தை
வாழ்ந்திடவே எங்கள் திருத்தந்தை - தினம்
வாழ்க வeர்கவே வாழ்க
வாழ்க வeர்க - 2
வாழ்க வeர்கவே வாழ்க

1. இயேசுபிரான் தந்த திருமறையாம் - அந்த
இறைமகனே அதன் தலைவருமாம்
காணும் தலைவர் பேதுருவாம் - எங்கள்
பேதுரு வழி வழி திருத்தந்தையாம்

2. உரோமையிலே கொலு வீற்றிருந்து - இந்த
உலகமெல்லாம் அரசாளுகின்றார்
மஞ்சள் வெள்ளைக் கொடி நிழலில் - மக்கள்
மனங்களில் எல்லாம் வாழுகின்றார்