1454.தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்
தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்
1. ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்
2. என் எதிரிகள் அனைவருடையவும்
பழிச் சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்
3. ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்
நீரே என் கடவுள் என்றேன் என் கதி
உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்
4. கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீதுநம்பிக்கையுள்ளவர்களே மனத்திடம் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

1455.திருச்சிலுவை மரமிதோ
திருச்சிலுவை மரமிதோ
குரு : திருச்சிலுவை மரமிதோ
இதிலேதான் தொங்கியது
உலகத்தின் மீட்பு
எல் : வருவீர் ஆராதிப்போம்
குரு : திருச்சிலுவை மரமிதோ
இதிலேதான் தொங்கியது
உலகத்தின் மீட்பு
எல் : வருவீர் ஆராதிப்போம்
1456.எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்குத் துயர் தந்தேன் எனக்குப் பதில் நீ கூறிடுவாய்
1. எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்குச்
சிலுவை மரத்தை நீ தந்தாய்? - எனது சனமே
2. நாற்பது ஆண்டுகள் நான் உன்னை
பாலைநிலத்தில் வழிநடத்தி உனக்கு மன்னா உணவூட்டி
வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு
சிலுவை மரத்தை நீ தந்தாய் - எனது சனமே
3. நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன்: நீ என்னைக்
கசையால் வதைத்துக் கையளித்தாய் - எனது சனமே
4. பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி
எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம்
குருக்களிடத்தில் கையளித்தாய்! - எனது சனமே
5. நானே உனக்கு முன்பாகக் கடலைத் திறந்து வழி செய்தேன்:
நீயோ எனது விலாவை ஓர்
ஈட்டியினாலே திறந்தாய்! - எனது சனமே
6. மேகத்தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே நான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதிமன்றம்
என்னை இழுத்துச் சென்றாயே! - எனது சனமே
7. பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னை உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில்
அடித்துக் கசையால் வதைத்தாயே! - எனது சனமே
8. இனிய நீரைப் பாறையினின்று உனக்குக் குடிக்கத் தந்தேனே!
நீயோ கசக்கும் காடியை
எனக்குக் குடிக்கத் தந்தாயே! - எனது சனமே
9. கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு
எந்தன் சிரசில் அடித்தாயே! - எனது சனமே
10. அரசர்க்குரிய செங்கோலை உனக்குத் தந்தது நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு
முள்ளின் முடியைத் தந்தாயே! - எனது சனமே
11. உன்னை மிகுந்த வன்மையுடன் சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை எனும்
தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! - எனது சனமே

1457.ஆணி கொண்ட உன் காயங்களை
ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2
1. வலது கரத்தின் காயமே - 2
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
2. இடது கரத்தின் காயமே - 2
கடவுளின் திரு அன்புருவே - அன்புடன்
3. வலது பாதக் காயமே - 2
பலன் மிகத் தரும் நற்கனியே - அன்புடன்
4. இடது பாதக் காயமே - 2
திடம் மிகத் தரும் தேனமுதே - அன்புடன்
5. திருவிலாவின் காயமே - 2
அருள் சொரிந்திடும் ஆலயமே - அன்புடன்
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2
1. வலது கரத்தின் காயமே - 2
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
2. இடது கரத்தின் காயமே - 2
கடவுளின் திரு அன்புருவே - அன்புடன்
3. வலது பாதக் காயமே - 2
பலன் மிகத் தரும் நற்கனியே - அன்புடன்
4. இடது பாதக் காயமே - 2
திடம் மிகத் தரும் தேனமுதே - அன்புடன்
5. திருவிலாவின் காயமே - 2
அருள் சொரிந்திடும் ஆலயமே - அன்புடன்
1458.பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்
பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடிப் பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே
கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய்யும் நாதனே
மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே -கெட்டுப்
1. துசிட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே
கசிடமாய் அடித்த போது பாய்ந்த செந்நீர் எத்துணை - கெட்டுப்
2. சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தினால் சர்வ பாவம் நீங்குமே - கெட்டுப்
3. ஐந்து காயத்தால் வடிந்த அரிய இரத்தத்தினால்
மிஞ்சும் எங்கள் பாவம் தீர்க்க வேண்டுகிறோம் இயேசுவே - கெட்டுப்

1459.நம்பிக்கை தரும் சிலுவையே
நம்பிக்கை தரும் சிலுவையே
நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்
உன்னைப் போன்று தழை பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால்
இனிது தாங்கும் மரமே நீ
1. மாட்சி மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து
செயத்தின் கீதம் ஓதுவாய் - நம்பிக்கை
2. தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கைக் கண்டு நொந்த சிருசிடிகர்
மரத்தால் வந்தத் தீங்கை நீக்க
மரத்தை அன்றே குறித்தனர் - இனிய
3. வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின்
ஒழுங்கில் குறித்து இருந்தது - நம்பிக்கை
5. எனவே புனித கால நிறைவில் தேவபிதா தம் மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார் அன்னை கன்னி வயிற்றிலே
ஊன் எடுத்து வெளிவந்தாரே
மண்ணகத்தைப் படைத்தவர் - இனிய
6. இடுக்கமான முன்னட்டியிலே கிடந்து குழந்தை அழுகிறார்
தேவ உடலைத் துகிலில் பொதிந்து சுற்றி வைத்து கன்னித்தாய்
இறைவன் அவர்தம் கையும் காலும்
கச்சையாலே பிணைக்கின்றார் - நம்பிக்கை
7. முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின் காலம் நிறைவுற
மீட்பர் தாமாய் மனமுவந்து பாடுபடவே கையளித்தார்
சிலுவை மரத்தில் பலியாகிடவே
செம்மறி உயர்த்தப் படலானார் - இனிய
8. கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும்
அதனால் தூய்மை ஆயின - நம்பிக்கை
9. வளர்ந்த மரமே உன்கிளை தாழ்த்தி
விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின்
உயர்ந்த தணித்துத் தாங்குவாய் - இனிய
10. மரமே நீயே உலகின் விலையைத் தாங்கத் தகுதியாகிய கிளை
திருச்செம்மறியின் குருதி உன்மேல் பாய்ந்து, தோய்த்ததாதலால்
புகலிடம் நீ, படகும் நீ - நம்பிக்கை
11. பரம திருத்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம்
பிதாவும் சுதனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே
அவர்தம் அன்பின் அருளினாலே
நம்மைக் காத்து மீட்கின்றார் - ஆமென்.

1460.சிலுவையில் தொங்கும் செம்மறியே என்னைச்
சிலுவையில் தொங்கும் செம்மறியே என்னைச்
சிலையென நிறுத்தும் அன்புருவே
கசையடி குதறிய உமைக் காண - மனம்
கசிந்திடக் கண்ணீர் பெருகிடுதே - 2
1. சாட்டையால் உமதெழில் மலருடலை - ஒரு
சாலென எண்ணி உழுதனரோ
வேட்டையில் விழுந்த மானெனவே உம்மை
வீணர்கள் எண்ணிக் கீறினரோ - 2
2. கூரிய முள்முடியால் தலையில் - இன்று
ஏறின துன்பம் எவ்வளவோ
யாருமே இல்லையோ நண்பரென உமக்(கு)
ஆறுதல் தந்து தேற்றிடவே - 2
3. அணைத்திட விரித்த கரங்களிலே - கொடும்
ஆணியே அமைவாய் நுழைந்ததுவோ
தேடிய திருவடி துளைபடவே - அது
திரண்டெழு குருதியில் குளித்ததுவோ - 2
சிலையென நிறுத்தும் அன்புருவே
கசையடி குதறிய உமைக் காண - மனம்
கசிந்திடக் கண்ணீர் பெருகிடுதே - 2
1. சாட்டையால் உமதெழில் மலருடலை - ஒரு
சாலென எண்ணி உழுதனரோ
வேட்டையில் விழுந்த மானெனவே உம்மை
வீணர்கள் எண்ணிக் கீறினரோ - 2
2. கூரிய முள்முடியால் தலையில் - இன்று
ஏறின துன்பம் எவ்வளவோ
யாருமே இல்லையோ நண்பரென உமக்(கு)
ஆறுதல் தந்து தேற்றிடவே - 2
3. அணைத்திட விரித்த கரங்களிலே - கொடும்
ஆணியே அமைவாய் நுழைந்ததுவோ
தேடிய திருவடி துளைபடவே - அது
திரண்டெழு குருதியில் குளித்ததுவோ - 2
1461.என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
1. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா
3. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
1. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா
3. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ
1462.கல்வாரி சிகரமதில் கல்நெஞ்சக் கயவர்களால்
கல்வாரி சிகரமதில் கல்நெஞ்சக் கயவர்களால் - 2
கருணையின் உருவம் கனிவான தெய்வம்
சிலுவையில் தொங்கும் (என் இயேசுவைப் பார்) - 2
1. தீர்ப்பிடாதே என்று சொன்ன - என்
இயேசுவின் நிலைமையைப் பார்
குருதியில் நனைந்திருக்கும் இயேசுவின் முகத்தினைப் பார்
பிலாத்துவின் முன்னே அநீதியின் தீர்ப்பிலே
அமைதியில் நிற்பதைப் பார் - 2
2. பிறருக்கு உதவி செய்த - என்
இயேசுவின் கரங்களைப் பார்
ஆணிகள் துளைத்திடவே ஆண்டவர் துடிப்பதைப் பார்
அயலானை மன்னித்து தந்தையின் கரங்களில்
ஆவியைத் துறப்பதைப் பார்