Warning: include(../../home/iconmob.php): Failed to open stream: No such file or directory in C:\xampp\htdocs\website2\mobile\thirumaraichuvadi\index.php on line 24

Warning: include(): Failed opening '../../home/iconmob.php' for inclusion (include_path='C:\xampp\php\PEAR') in C:\xampp\htdocs\website2\mobile\thirumaraichuvadi\index.php on line 24
திருமறைச்சுவடி

அன்பு இறைமக்களே! மறைக்கல்வி மறுமலர்ச்சியில் தமிழ்நாடு விவிலிய மறைக்கல்வித் திருவழிபாட்டு நடுநிலையம் பல்வேறு மகத்தானப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றது. இதுவரை நாம் பயன்படுத்தி வந்த சின்னக் குறிப்பிடத்துக்கும் திருமறைச் சுவடிக்கும் பதிலாக, புதிதாகத் திருத்தி வடிவமைக்கப்பட்ட இப்புதிய திருமறைச் சுவடி வெளிவந்துள்ளது. இது நமது கத்தோலிக்க நம்பிக்கைக்கு ஓர் அடிப்படை மறைக்கல்வி நூலாக அமைகின்றது. இதற்கென்று அமைக்கப்பட்ட குழுவினர், ஈராண்டுகளாக முயன்று ஒன்று திரட்டியத் தொகுப்பை நமது தமிழக ஆயர்களுக்கு அளித்தனர். நமது ஆயர்கள் அதை திரம்பட ஆய்வு செய்து, சில தெளிவுகளைக் கொடுத்தனர். பின்னர் அவற்றின் ஒளியில் அக்குழுவினர் மீண்டும் திருத்தி அமைத்தத் தொகுப்பை நமக்கு வெளியிட்டுள்ளனர். இதில் கூடிய வரைத் திருவிவிலிய மரபு (புதிய மொழிபெயர்ப்பு) பின்பற்றப்பட்டுள்ளது. சிறியோர் முதல் பெரியோர் வரை, தமிழ் பேசும் இறைமக்கள் அனைவரும் இந்நூலைப் பயன்படுத்தி கிறிஸ்தவ வாழ்வில் சிறந்தோங்க வாழ்த்துகிறேன். 26-01-2007 மேதகு. தேவதாஸ் அம்புரோஸ் தஞ்சை ஆயர், தலைவர் தமிழக மறைக்கல்விப் பணிக்குழு.