முகப்பு


1434.கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா - 2

1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா - 2 - அங்குப்
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா - 2

2. பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க
பாதத்தைப் பிடித்தேன் இறைவா - 2 - துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா - 2

3. நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா - 2 அங்குப்
பூவெனும் இதயப் பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா
1435.சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம்
சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம் - அவர்
அன்பே தவிர ஆணியில்லை
சாவை வென்றவர் உயிர்த்ததுவும் - அன்பின்
சக்தியைத் தவிர ஏதுமில்லை
சக மனிதனை அன்பு செய்தால் - இங்கே
சகலமும் சரியாகும் தோழா - 2 தோழா என் அன்புத் தோழா

1. தரணியில் இயேசுவாய்ப் பிறந்ததெல்லாம் - நம்மைத்
தாங்கும் இறைவனின் அன்பேதான்
இறப்பிலும் கூட இறைமகனும் - நமக்கு
உரைத்தது அன்பின் மகத்துவம்தான்
அன்பே இறைவன் என்றறிந்தால் - நம்
அகமே ஆலயம் எனத் தெளிவோம்
ஒருவரை ஒருவர் அன்பு செய்து - அங்கே
ஒன்றாய்த் தினமும் வழிபடுவோம் - சக மனிதனை

2. மனத்திற்குத் தேவை உடன் வாழும் - பிற
மனிதரின் அன்பே எனப் புரிந்தால்
என் தேவை என் ஆசை என்றெண்ணியே - இங்கு
எந்நாளும் அலையாத மனம் வாய்த்திடும் - அன்பே இறைவன்
1436.தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னைப் பனிபோலாக்கும்
தோசமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

1. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடைமலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்
புனிதத்தைப் போக்கி நான் பாவியானேன் - நீர்
தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்

2. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்
ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக் குயர்வாகப் புனிதமாவேன்
1437.தவக்காலம் இது தவக்காலம்
தவக்காலம் இது தவக்காலம்
விடிவுகள் மலர்ந்திடும் அருட்காலம் - 2

1. இருளின் வாழ்வு கார்காலம் - அது
மறையவேண்டும் போர்க்காலம் - 2
உறுதி கொள்வோம் நிகழ்காலம் - 2
உதய வாழ்வே எதிர்காலம்

2. உள்ளம் நிகழும் ஆராய்ச்சி - அங்குப்
பாவ வாழ்வின் பொருட்காட்சி - 2
களைகள் களைந்து எழுந்திடுவோம் - 2
நிலவும் அன்பின் அரசாட்சி
1438.மனந்திரும்பு மனிதா நீ
மனந்திரும்பு மனிதா நீ
நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு
மனந்திரும்பு மனிதா - 2

1. நீதிமான்களை அழைத்த அன்று பாவிகளையே
தேடி வந்தேன் - 2
இரக்கம் நாடும் இறைவன் நானே
பலிகளில் விருப்பம் இல்லையே - 2 எனவே

2. பிரிந்து சென்ற மகன் தானும் திரும்பி வந்தால் ஆனந்தமே - 2
மனந்திரும்பும் பாவியினாலே
மகிழ்வு கொள்ளும் வானகமே - 2
1439.மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

1. பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

2. மரணம் வருவதை மனிதன் அறிவானோ - 2
தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

3. இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர் - 2
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்
1440.மனிதா ஓ மனிதா நீ மண்ணாய் இருக்கின்றாய்
மனிதா ஓ மனிதா நீ மண்ணாய் இருக்கின்றாய்
மண்ணுக்கே திரும்புவாய் நினைவில் வை - 3 ஓ மனிதா

1. இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இறைவனின் இரக்கம் வேண்டிப் பெறுவோம் - 2
பழையன விடுத்து புதியன புனைவோம் - 2
புனிதத்தில் நிலைத்துப் புதுப் படைப்பாவோம் - 2

2. கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் - 2
சாம்பலை அணிந்து செபதவம் புரிந்து - 2
சாவினைக் கடந்து வாழ்வினில் நுழைவோம் - 2