முகப்பு


1303.அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் - 2

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து - 2
வெறும் தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம் - 2

2. செங்கடலை இரண்டாகப் பிரித்திட்டார் அதிசயம் - 2
புயல்காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் - 2

3. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2
ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2

4. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - 2
1304.அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே
அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே
ஒருவார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம் - 2

2. தாவீதின் திருமகனே தயை கூர்ந்து இரங்குமையா
கடைக்கண்ணால் எமைப்பாருமே கருணைக்கடல் இயேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம் - 2

3. மெய் தொடுவாய் இயேசுவே நோய் களைவேன் இயேசுவே
ஆசீரளிப்பாய் இயேசுவே மீட்பு பெறுவேன் இயேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம் - 2

4. மார்போடு அணைத்துக் கொண்டு மன்னித்து வாழ்வு தரும்
பேரன்பே உன் பாதத்தில் என் முத்தம் பெற்றுக்கொள்ளும்
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம் - 2
1305. அன்பான தந்தாய் - 2 அடியேனின் ஆராதனை
அன்பான தந்தாய் - 2 அடியேனின் ஆராதனை - 2

1. உமது பெயர் உலகெங்கும் வியப்பானது - 2
உம் மகிமை வான்மேலே ஒளிர்கின்றது - 2
சிறுவரின் வாயும் உம்மைப் புகழ்ந்தேற்றச் செய்தீர் - 2
சீறிடும் பகைவரை வீழ்த்தவே செய்தீரே ஆ

2. விண்வெளியில் உம் படைப்பைக் காணும்போது - 2
மண்புழுவாம் மனிதன் நான் எம்மாத்திரம் - 2
வான்தூதரை விட தாழ்ந்தென்னைப் படைத்தீர் - 2
மாண்பாலே மனிதனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தீரே ஆ
1306.அன்பின் தெய்வமே அருளின் நாதரே
அன்பின் தெய்வமே அருளின் நாதரே
இன்று பாடுவேன் ஆராதனை இன்ப வாசமே இனிய நேசனே - 2
உவந்து பாடுவேன் ஆராதனை - ஆராதனை - 8

1. விழிகள் தேடிடும் வரமானவா
வழிகள் காட்டிடும் கரமானவா
உளமார வந்தேன் உமைப் பாடவே - உம்
உயிர் தந்து எந்தன் மீட்பானவா - ஆராதனை - 8

2. நற்கருணை வடிவே இயேசு நாதரே
திருவடியின் நிழலை நிதம் நாடினேன்
சுகம் கோடி பொழியும் அருள் தேவனே - என்
சிரம் தாழ்ந்து பணிந்தேன் எனில் வாருமே - 2 ஆராதனை - 8
1307.அன்பின் தேவ நற்கருணையிலே
அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர் தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப இரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவாய்த் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயைபுரிவீர்
1308.அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து
அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து
பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமசுகாரம்

1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்
நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்

2. நித்திய பிதாவினண்டை பாக்கியமாய் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை சுதந்திரமாய்க் கொண்டதேனோ

3. விண்ணுலகத் தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள் வந்ததென்ன வானரசே
1309.அன்பே உயிரே ஆராதனை
அன்பே உயிரே ஆராதனை
அளித்தோம் உமக்கே ஆராதனை - 2

1. உலகம் முடியும் நாள் வரையில் உமக்கே என்றும் ஆராதனை
தலைவா எங்கள் உள்ளங்களில்
தந்தோம் என்றும் ஆராதனை - 2

2. விண்ணில் மின்னும் தாரகைகள் விடுக்கும் என்றும் ஆராதனை
கண்ணில் ஆடும் கண்மணிகள்
சொல்லும் என்றும் ஆராதனை - 2

3. அழைப்பை ஏற்று ஆலயத்தில் தங்கிட வந்தாய் ஆராதனை
உழைப்பை ஏற்று உள்ள மெல்லாம்
உவந்தே செலுத்தும் ஆராதனை - 2
1310.ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை
ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை - 2
ஆராதனை ஆராதனை எங்கள் இயேசு இராசா உமக்கே - 2

1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை
கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை
காலங்களைக் கடந்து வாழ்பவரே
கண்ணை மூடி கரம் குவித்து ஆராதனை - ஆராதனை

2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை
அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை
ஆயிரமாய் அற்புதம் செய்பவரே
சிரம் தாழ்த்தி தாள் பணிந்து ஆராதனை - ஆராதனை

3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை
எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை
உயிரின் உயிராய் இருப்பவரே
புத்தம் புது கீதங்களால் ஆராதனை - ஆராதனை
1311.ஆராதனை ஆயிரம் துதிகள்
ஆராதனை ஆயிரம் துதிகள்
தோத்திரம் நமசுகாரம் நற்கருணை நாதர்க்கே

1. தாயைப் போல் தேற்றிட மண்ணகம் வந்தவா - 2
தந்தையைப் போல் இரங்கிட கரங்கள் விரித்தவா - 2

2. உலகத்தின் பாவங்களைப் போக்க வந்தவா - 2
சாபங்களை பாவங்களை சுமந்து தீர்த்தவா - 2
1312.ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை

1. வானமும் பூமியும் படைத்தவா ஆராதனை
வார்த்தையால் எம்மை நிரப்பவா ஆராதனை - 2
வல்லமை எம்மில் சேர்ப்பவா ஆராதனை
வளமும் நலமும் தருபவா ஆராதனை

2. அமைதியில் என்றும் வாழ்பவா ஆராதனை
அருளை தினமும் பொழிபவா ஆராதனை - 2
ஆற்றலாய் எம்மில் இருப்பவா ஆராதனை
ஆனந்த துதியில் மகிழ்பவா ஆராதனை

3. தூய ஆவியைத் தந்தவா ஆராதனை
தூய நல் மனத்தில் திகழ்பவா ஆராதனை - 2
துன்பத்தின் சூழலில் அணைப்பவா ஆராதனை
துணையாய் என்றும் இருப்பவா ஆராதனை
1313.ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் - 2

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன் - 2

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன் - 2

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் - 2

4. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன் - 2

5. புத்தாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் - 2
1314. ஆன்மாவின் சந்நிதியே ஆண்டவா எம் தேவனே
ஆன்மாவின் சந்நிதியே ஆண்டவா எம் தேவனே
ஆராதனை செய்கின்றோம் நெஞ்சத்தின் நிம்மதியே
ஆராதனை ஆராதனை

1. அன்னையும் தந்தையுமாய் அணைத்துக் காப்பவரே
எந்நாளும் வாழ்ந்திடவே கருணா மூர்த்தியானாய்

2. உடலும் இரத்தமுமாய் வீற்றிருக்கும் இயேசுவே
நன்றியால் தொழுகின்றோம் நற்கருணை நாதரே

3. சிலுவை மரணத்தால் சிந்திய இரத்தத்தாலே
சந்திக்கும் உள்ளங்களை சுத்தரிக்கும் இறையே
1315.உயிருள்ள தேவா உமக்கு ஒரு பாடல்
உயிருள்ள தேவா உமக்கு ஒரு பாடல்
உண்மையின் நாதா பாடுகின்றோமே
ஆராதனை - 4
அமைதியின் தூதா இது என் கீதம் - 2
இயேசுவே நாதா தீரும் என் தாகம்
ஆராதனை - 4

1. பாதைகள் தவறி நாங்கள் சென்றிடும்போது
உம் பாதைக்கு எம்மை அழைத்தாயே
தீமைகள் எம்மைச் சூழ்ந்திடுமே
உம் தூயநல் ஆவி அளிப்பாயே
அடைக்கலப் பாறையே இறைவா - 2
உம் பாதத்தில் பணி செய்ய வரம் தருவாய்
ஆராதனை - 4

2. அன்பினை இழந்து நாங்கள் அலைகின்ற போது
நல் அருளினை எமக்கு அருள்வாயே
உறவினை மறந்து நாங்கள் வாழ்கின்ற போது
உம் உறவினில் நிலைக்கச் செய்வீரே
வல்ல எம் தேவனே இறைவா - 2
எம் வாழ்வுக்கு வழிதனைக் காட்டிடுவாய் - 2 - உயிருள்ள - 2
1316.என் இயேசுவே என் ஆண்டவரே
என் இயேசுவே என் ஆண்டவரே
உம்மை ஆராதிக்கிறேன்
என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் - 2

1. நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள் - 2
உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது - 2

2. ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும் - 2
என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் - 2
1317.ஓ தேவ சற்பிரசாதமே ஓ தயையின் ஊற்றே
ஓ தேவ சற்பிரசாதமே ஓ தயையின் ஊற்றே
மா தேவே எம்மில் என்றும் நீர் வாசஞ் செய்யலானீர்
ஓ இயேசு கிறித்துவே நமோ ஓ சிநேக தேவனே
நீசர்களாம் எம்மேல் வைத்த நேசம் என் சொல்வோம் யாம்-2

1. விண்ணோர் விருந்தே நீரெங்கள் வெம்பவம் நோக்காமல்
மண்மீதெஞ்ஞான்றும் அன்பினால் வாசஞ் செய்யலானீர் - ஓ

2. தற்பரனாம் உம்மைப் பெற தைரியம் யாம் கொள்ள
அப்பத்தில் நீர் மறைந்தெம்மை அன்போடழைக்கின்றீர் - ஓ
1318.காணுகின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
காணுகின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
கருணையின் உருவமே ஆராதிக்கின்றோம்
நேற்றும் இன்றும் என்றென்றுமே - 2
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
வாக்குமாறா தெய்வமே

1. செங்கடலைக் கடந்து விடுதலை செய்தவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

2. மன்னாவைப் பொழிந்து இசுரயேலைக் காத்தவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
விண்ணிலும் மண்ணிலும் விந்தைகளைச் செய்பவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

3. வார்த்தையின் வடிவில் எம்மிலே வாழ்பவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
சுமைகளைச் சுமந்து ஆறுதல் தருபவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
1319.நற்கருணை நாதரே என் துணையாக வாருமே
நற்கருணை நாதரே என் துணையாக வாருமே - 4
மாறாத பாசம் வைத்தேன் இவ்வேளை
துணையாக வாருமே - 2
மனம் திறந்து பேச மருரூபமாகிட
துணையாக வாருமே

கனிந்துருகும் அன்பில் கரையேற்றம் பெறவே
துணையாக வாருமே - 2
கருணைக் கண் கொண்டு என் கதியே என்னோடு
துணையாக வாருமே - 2

எனதிந்த நிலையில் என்னோடு நடக்க
துணையாக வாருமே - 2
எண்ணில்லா வரங்கள் என்னில் வழங்க
துணையாக வாருமே - 2

உடைந்தெந்தன் உள்ளம் உயிரூட்டம் பெறவே
துணையாக வாருமே - 2
ஊனுடல் உம்மாலே உறவூட்டம் பெறவே
துணையாக வாருமே - 2

அலைபாயும் நெஞ்சம் அது தேடும் தஞ்சம்
துணையாக வாருமே - 2
ஆத்மாவின் ராகம் அது உந்தன் பாதம்
துணையாக வாருமே - 2
1320.மகிமையின் இராசனே மகத்துவ தேவனே
மகிமையின் இராசனே மகத்துவ தேவனே
உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை - 2

1. இறையே எம் அரசே இயேசு பெருமானே
எங்கள் குலகுருவே உமக்கே ஆராதனை

2. சிலுவைக் கொடியேந்தி செயமே முடிதாங்கி
வானகம் திறந்தோனே உமக்கே ஆராதனை

3. செயம் பேரிகை முழங்க செகதலத்தோர் களிக்க
சிருசிடிகளெல்லாம் மகிழ உமக்கே ஆராதனை