முகப்பு


1441.தாவீதின் மகனுக்கு ஓசன்னா
தாவீதின் மகனுக்கு ஓசன்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்பப் பெற்றவரே இசுராயேலின் பேரரசே
உன்னதங்களிலே ஓசன்னா
1442.எபிரேயர்களின் சிறுவர் குழாம்
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே

1. மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன
பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்
அவர் தம் உடைமையே
ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை
நிலை நிறுத்தியவர் அவரே
ஆறுகளின் மீது அதை நிலைநாட்டியவர் அவரே

2. ஆண்டவரது மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தல் நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன்
பயனற்றதில் மனத்தைச் செலுத்தாதவன்
தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

3. இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்
இவனே தன்னைக் காக்கும்
ஆண்டவரின் மீட்பு அடைவான்
இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே
யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

4. வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்
பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்
போரில் வல்லவரான ஆண்டவரே இவர்
1443.கிறித்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ் உமக்கே
கிறித்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ் உமக்கே
எழிலார் சிறுவர் திரள் உமக்கே அன்புடன் பாடினர் ஓசான்னா

1. இசுரயேலின் அரசர் நீர் தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆசிபெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்

2. வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ
அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

3. எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்
செபமும் கீதமும் காணிக்கையும்
கொண்டு யாம் இதோ வருகின்றோம்

4. பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனைச் செலுத்தினாரே
ஆட்சி செலுத்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்

5. அவர் தம் பக்தியை ஏற்றீரே நலமார் அரசே அருளரசே
நல்லன எல்லாம் ஏற்கும் நீர் எங்கள் பக்தியும் ஏற்பீரே
1444.ஆயிரக் கணக்கான வருடங்களாய்
ஆயிரக் கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இசுராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருளும்
ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே

2. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர்

3. தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே எழுவீரே

4. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்
கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்

5. புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள்மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே

6. மரித்தவர்கள் அநேகர் உயிர்பெற்றார் - ஒரு மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

7. குருடர்கள் பலர் பார்வை பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குசுடர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீர்

8. யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்
யூதர் இராசரென்று முடிபெற்றீர்
எருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்

9. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே

10. கோவேறு குட்டியே ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது செயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

11. உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே
1445.ஆண்டவர் புனித நகரத்தில்
ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசன்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசன்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
1446.என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்
என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்

1. எங்கள் முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பிக்கை வைத்ததால் அவர்களுக்கு விடுதலை அளித்தீர்
உம்மை நோக்கிக் கூவினார்கள் ஈடேற்றம் அடைந்தார்கள்
உம்மீது நம்பிக்கை வைத்தார்கள் ஏமாற்றம் அடையவில்லை

2. ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
நீரோவெனில் என்னைக் கருப்பையிலிருந்து வரச் செய்தீர்
தாயின் மடியிலேயே எனக்கு உறுதியான பாதுகாப்பாயிருந்தீர்

3. நானோவெனில் மனிதனேயல்ல புழுவுக்கு ஒப்பானேன்
மனிதரின் நிந்தனைக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானேன்
என்னைப் பார்ப்போர் எல்லோரும்
என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்
1447.கிறித்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
கிறித்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிபவரானார். ஆதலால்தான் கடவுள் அவரை
எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான
பெயரை அவருக்கு அருளினார்.