1351.இருமன இணைப்பிலே இறைவனின் ஆசீர் பொங்குதே
இருமன இணைப்பிலே இறைவனின் ஆசீர் பொங்குதே
பொங்கும் இறை கருணையால் ஆசீர் நீவிர் பெறவே - 2
திருமண நாள் வந்ததே - இனி
அன்பு மட்டும் உங்கள் நெஞ்சிலே - 2
1. இறையில்லா சிறுபொழுதும் வீணானதே
இறை வந்ததால் உம்முள்ளம் மகிழ்வானதே - 2
அவரின்றி உம் வாழ்வில் பொருளில்லையே
அவர் மட்டும் உம் சொந்தம் எப்போதுமே - திருமண நாள்
2. அன்பில்லா புவி முழுதும் வீணாகுமே
இறை அன்பினால் உம்முள்ளம் மகிழ்வாகுமே
....................வந்து உம் வாழ்வில் ஒன்றானதால்
....................உம் வாழ்வு மகிழ்வாகுமே - திருமண நாள்
பொங்கும் இறை கருணையால் ஆசீர் நீவிர் பெறவே - 2
திருமண நாள் வந்ததே - இனி
அன்பு மட்டும் உங்கள் நெஞ்சிலே - 2
1. இறையில்லா சிறுபொழுதும் வீணானதே
இறை வந்ததால் உம்முள்ளம் மகிழ்வானதே - 2
அவரின்றி உம் வாழ்வில் பொருளில்லையே
அவர் மட்டும் உம் சொந்தம் எப்போதுமே - திருமண நாள்
2. அன்பில்லா புவி முழுதும் வீணாகுமே
இறை அன்பினால் உம்முள்ளம் மகிழ்வாகுமே
....................வந்து உம் வாழ்வில் ஒன்றானதால்
....................உம் வாழ்வு மகிழ்வாகுமே - திருமண நாள்
1352.இருமனம் ஒருமனமே என்றும் இணைவது திருமணமே
இருமனம் ஒருமனமே என்றும் இணைவது திருமணமே
இந்நந்நாளில் நாங்கள் வாழ்த்திடுவோம்
திருக்குடும்பத்தின் நலம் நினைந்தே
கடவுளின் அன்பு உண்டு - அந்த
அன்புக்கு வாழ்வு உண்டு - இன்று
இணைந்திட்ட மணமக்கள் வாழ்வினிலே என்றும்
அவரது ஆசி உண்டு
இந்நந்நாளில் நாங்கள் வாழ்த்திடுவோம்
திருக்குடும்பத்தின் நலம் நினைந்தே
கடவுளின் அன்பு உண்டு - அந்த
அன்புக்கு வாழ்வு உண்டு - இன்று
இணைந்திட்ட மணமக்கள் வாழ்வினிலே என்றும்
அவரது ஆசி உண்டு
1353.உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு ஆசீரளிப்பார்
உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு ஆசீரளிப்பார்
1. ஆண்டவர்க்கஞ்சும் நீ பேறுபெற்றோன்
அவர் காட்டிய வழியில் நீ நடப்பாய்
உழைப்பால் நீ உந்தன் உணவைக் கொள்வாய்
எல்லாம் உனக்கு நலமாகும்
2. மக்களின் மக்களைக் காண்பீராக
உங்கள் வாழ்வினில் அமைதி நிலவிடுக
இறைவன் தரும் நல் சமாதானம்
என்றென்றும் உங்களில் நிலைத்திடுமே
1. ஆண்டவர்க்கஞ்சும் நீ பேறுபெற்றோன்
அவர் காட்டிய வழியில் நீ நடப்பாய்
உழைப்பால் நீ உந்தன் உணவைக் கொள்வாய்
எல்லாம் உனக்கு நலமாகும்
2. மக்களின் மக்களைக் காண்பீராக
உங்கள் வாழ்வினில் அமைதி நிலவிடுக
இறைவன் தரும் நல் சமாதானம்
என்றென்றும் உங்களில் நிலைத்திடுமே
1354.மணமக்கள் மீது மலர்களைத் தூவி வாழ்த்திப் பாடிடுவோம்
மணமக்கள் மீது மலர்களைத் தூவி வாழ்த்திப் பாடிடுவோம்
மங்கலம் மங்கலம் சோபன மங்கலம் மங்கலம் பாடிடுவோம்
1. மயில்கள் ஆடட்டும் குயில்கள் பாடட்டும்
வானவர் வானுரை வாழ்த்திடட்டும்
தேவகுமாரா தாவீதின் மைந்தா
அருளின் திரு உருவே ஆசியைப் பொழிந்தருளும்
2. மணமகள் .......... மணமகன் ..........
இணைந்து வாழ செபித்திடுவோம்
உங்கள் வாழ்க்கையில் இன்பங்கள் நிறைந்து
இல்லறம் தழைத்திடவே இறைவனை இறைஞ்சிடுவோம்
மங்கலம் மங்கலம் சோபன மங்கலம் மங்கலம் பாடிடுவோம்
1. மயில்கள் ஆடட்டும் குயில்கள் பாடட்டும்
வானவர் வானுரை வாழ்த்திடட்டும்
தேவகுமாரா தாவீதின் மைந்தா
அருளின் திரு உருவே ஆசியைப் பொழிந்தருளும்
2. மணமகள் .......... மணமகன் ..........
இணைந்து வாழ செபித்திடுவோம்
உங்கள் வாழ்க்கையில் இன்பங்கள் நிறைந்து
இல்லறம் தழைத்திடவே இறைவனை இறைஞ்சிடுவோம்
1355.மண வாழ்வு - புவி வாழ்வினில் வாழ்வு
மண வாழ்வு - புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு - 2
1. துணை பிரியாது தோகையிம்மாது
துப மண மகளிவர் இது போது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன முமதருள் பெறவேது - நல்ல
2. சீவ தயாகரா சிருசிடிய திகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லை யூரா
சேர்ந்தவர்க் கருள் தராதிருப்பீரா - நல்ல
3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சம்சாரம்
அடக்கமாசாரம் அன்பு உதாரம்
அம் புவிதனில் மனைக் கலங்காரம் - நல்ல
4. மணமகன் ...............................மணமகள் ....................................
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன முமதருள் பெறவேது - நல்ல
5. நலவாழ்வு புகழ் உணவு கல்வி
அறிவு செல்வம் மக்கட்பேறு அழகு
இeமை வலிமை வாழ்நாள் வெற்றி
பெருமை துணிவு நுகர்ச்சி நல்லூழ்
(பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க)
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு - 2
1. துணை பிரியாது தோகையிம்மாது
துப மண மகளிவர் இது போது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன முமதருள் பெறவேது - நல்ல
2. சீவ தயாகரா சிருசிடிய திகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லை யூரா
சேர்ந்தவர்க் கருள் தராதிருப்பீரா - நல்ல
3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சம்சாரம்
அடக்கமாசாரம் அன்பு உதாரம்
அம் புவிதனில் மனைக் கலங்காரம் - நல்ல
4. மணமகன் ...............................மணமகள் ....................................
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன முமதருள் பெறவேது - நல்ல
5. நலவாழ்வு புகழ் உணவு கல்வி
அறிவு செல்வம் மக்கட்பேறு அழகு
இeமை வலிமை வாழ்நாள் வெற்றி
பெருமை துணிவு நுகர்ச்சி நல்லூழ்
(பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க)
1356.மூவோர் இறைவன் அன்பு உறவு
மூவோர் இறைவன் அன்பு உறவு
பூவினில் நமது குடும்ப வாழ்வு
ஆதி முதலே நன்றெனக் கண்டு
ஆண்டவர் தாமே அமைத்த படைப்பு
அன்பின் ஆலயம் குடும்பம் உறவின் சங்கமம் குடும்பம்
வளமிகு ஆன்மீகம் குடும்பம் பேரின்ப ஆரம்பம் குடும்பம்
1. ஆணும் பெண்ணுமாய் (மனிதரைப் படைத்தார்) - 2
அன்பு உறவை அவர்களில் விதைத்தார் - 2
குடும்ப வாழ்வைத் தொடக்கியே வைத்தார் - 2
குழுமம் எனவே வளர்ந்திடப் பணித்தார் - அன்பின்
2. கிறிஸ்து இயேசு போல (மணமகன் வாழ) - 2
திருஅவையெனவே மணமகள் ஒளிர - 2
திருமணம் என்னும் அருட்சாதனத்தில் - 2
இருமனம் இணையும் இல்லறம் வாழ்க
பூவினில் நமது குடும்ப வாழ்வு
ஆதி முதலே நன்றெனக் கண்டு
ஆண்டவர் தாமே அமைத்த படைப்பு
அன்பின் ஆலயம் குடும்பம் உறவின் சங்கமம் குடும்பம்
வளமிகு ஆன்மீகம் குடும்பம் பேரின்ப ஆரம்பம் குடும்பம்
1. ஆணும் பெண்ணுமாய் (மனிதரைப் படைத்தார்) - 2
அன்பு உறவை அவர்களில் விதைத்தார் - 2
குடும்ப வாழ்வைத் தொடக்கியே வைத்தார் - 2
குழுமம் எனவே வளர்ந்திடப் பணித்தார் - அன்பின்
2. கிறிஸ்து இயேசு போல (மணமகன் வாழ) - 2
திருஅவையெனவே மணமகள் ஒளிர - 2
திருமணம் என்னும் அருட்சாதனத்தில் - 2
இருமனம் இணையும் இல்லறம் வாழ்க