1275.அப்பா தந்தையே மனம் வருந்தி வருகிறேன்
அப்பா தந்தையே மனம் வருந்தி வருகிறேன்
அன்போடு அரவணைத்து ஏற்றிடுவாய் இறைவா - 2
1. உன் அன்பை மறந்து நான் ஊதாரியாகினேன் - 2
உன் உறவை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன் - 2
2. உன் வார்த்தை மறந்து நான் ஊதாரியாகினேன் - 2
உன் வழியில் நடந்திட உம்மிடம் வருகிறேன் - 2
3. உன் இரக்கம் மறந்து நான் ஊதாரியாகினேன் - 2
உன் கருணை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன் - 2
அன்போடு அரவணைத்து ஏற்றிடுவாய் இறைவா - 2
1. உன் அன்பை மறந்து நான் ஊதாரியாகினேன் - 2
உன் உறவை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன் - 2
2. உன் வார்த்தை மறந்து நான் ஊதாரியாகினேன் - 2
உன் வழியில் நடந்திட உம்மிடம் வருகிறேன் - 2
3. உன் இரக்கம் மறந்து நான் ஊதாரியாகினேன் - 2
உன் கருணை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன் - 2
1276.அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்
சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் - 2
1. உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் - இயேசுவின்
உலகினில் என்றும் நிலையான செல்வம் - இயேசுவின்
2. வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது - இயேசுவின்
மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் - இயேசுவின்
இயேசுவின் திருவடி சரணாலயம்
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்
சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் - 2
1. உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் - இயேசுவின்
உலகினில் என்றும் நிலையான செல்வம் - இயேசுவின்
2. வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது - இயேசுவின்
மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் - இயேசுவின்
1277.அன்பு செய்ய வரம் வேண்டும் இறைவா இறைவா
அன்பு செய்ய வரம் வேண்டும் இறைவா இறைவா - 2
1. உதவி செய்ய நான் நினைக்க உதைத்து என்னை வதைப்பவரை
2. உறவு கொள்ள நான் நினைக்க ஊறுசெய்ய நினைப்பவரை
3. பிழை பொறுக்க நான் நினைக்க பேதை எனப் பழிப்பவரை
4. துன்ப துயர் நான் சுமக்கத் துணை வராது அகல்பவரை
5. கண் கலங்கி நான் துடிக்கக் காணாமல் செல்பவரை
1. உதவி செய்ய நான் நினைக்க உதைத்து என்னை வதைப்பவரை
2. உறவு கொள்ள நான் நினைக்க ஊறுசெய்ய நினைப்பவரை
3. பிழை பொறுக்க நான் நினைக்க பேதை எனப் பழிப்பவரை
4. துன்ப துயர் நான் சுமக்கத் துணை வராது அகல்பவரை
5. கண் கலங்கி நான் துடிக்கக் காணாமல் செல்பவரை
1278.அன்பெனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லையே
அன்பெனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லையே
1. என்னென்னவோ திறமைகள் எனக்கிருந்தும் - அன்பெனக்கு
எதுவரைக் கல்வியை நான் அறிந்தும் - அன்பெனக்கு
2. அனைத்தையும் நான் இங்கு அறிந்திருந்தும் - அன்பெனக்கு.
ஆற்றல்கள் அனைத்தும் எனக்கிருந்தும் - அன்பெனக்கு
3. விசுவாசத்தில் நான் நிலைத்திருந்தும் - அன்பெனக்கு
ஆண்டவரை நான் அறிந்திருந்தும் - அன்பெனக்கு
1. என்னென்னவோ திறமைகள் எனக்கிருந்தும் - அன்பெனக்கு
எதுவரைக் கல்வியை நான் அறிந்தும் - அன்பெனக்கு
2. அனைத்தையும் நான் இங்கு அறிந்திருந்தும் - அன்பெனக்கு.
ஆற்றல்கள் அனைத்தும் எனக்கிருந்தும் - அன்பெனக்கு
3. விசுவாசத்தில் நான் நிலைத்திருந்தும் - அன்பெனக்கு
ஆண்டவரை நான் அறிந்திருந்தும் - அன்பெனக்கு
1279. ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே
ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே
உன் திருப்பாதம் சரணம் சரணம் - 4
1. சேயாக நானும் அழுகின்ற போது - 2
தாயாக உன் அன்பை நானும் சுவைத்தேன்
2. அன்பெனும் கடலில் நான் மூழ்கும் போது - 2
ஆண்டவன் உன்னைக் கண்டேன்
3. மெழுகாக நானும் தேய்ந்திடும் போது - 2
உன் தியாக வாழ்வில் நான் கலந்தேன்
உன் திருப்பாதம் சரணம் சரணம் - 4
1. சேயாக நானும் அழுகின்ற போது - 2
தாயாக உன் அன்பை நானும் சுவைத்தேன்
2. அன்பெனும் கடலில் நான் மூழ்கும் போது - 2
ஆண்டவன் உன்னைக் கண்டேன்
3. மெழுகாக நானும் தேய்ந்திடும் போது - 2
உன் தியாக வாழ்வில் நான் கலந்தேன்
1280.இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே - 3
1. காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே - 3
2. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியை அருள்வாயே - 3
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே - 3
1. காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே - 3
2. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியை அருள்வாயே - 3
1281.இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே
இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே - 2
வேக(த)மாய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே - 2
வேக(த)மாய் இறங்கி வா எந்தன் வாழ்வினிலே
1. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வியாதியிலே
2. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் ஆன்மாவில்
3. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் நெஞ்சினிலே
வேக(த)மாய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே - 2
வேக(த)மாய் இறங்கி வா எந்தன் வாழ்வினிலே
1. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வியாதியிலே
2. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் ஆன்மாவில்
3. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் நெஞ்சினிலே
1282.இயேசுவே உமது விலைமதிப்பில்லா
இயேசுவே உமது விலைமதிப்பில்லா
இரத்தத்தினால் என்னை மீட்டருள்வாயே - 2
1. பாவங்கள் போக்கி பரிசுத்தமாக
பரமன் உந்தன் பாதம் வந்தேனே - 2
2. ஆவியைத் தந்து அமைதியில் வாழ
அழைக்கும் உந்தன் கரம் பிடித்தேனே - 2
3. எல்லாம் உன் அன்பே என்று நான் வாழ
எல்லாமே உமக்காய் அர்ப்பணித்தேனே - 2
இரத்தத்தினால் என்னை மீட்டருள்வாயே - 2
1. பாவங்கள் போக்கி பரிசுத்தமாக
பரமன் உந்தன் பாதம் வந்தேனே - 2
2. ஆவியைத் தந்து அமைதியில் வாழ
அழைக்கும் உந்தன் கரம் பிடித்தேனே - 2
3. எல்லாம் உன் அன்பே என்று நான் வாழ
எல்லாமே உமக்காய் அர்ப்பணித்தேனே - 2
1283.இயேசுவே என் உயிரே என் அருகே நீ இருப்பாய்
இயேசுவே என் உயிரே என் அருகே நீ இருப்பாய் 6 - 4
இயேசுவே என் அன்பே என் இதயம் நீ இருப்பாய் 6 - 4
இயேசுவே என் வாழ்வே என் துணையாய் நீ வருவாய் 6 - 4
இயேசுவே என் அன்பே என் இதயம் நீ இருப்பாய் 6 - 4
இயேசுவே என் வாழ்வே என் துணையாய் நீ வருவாய் 6 - 4
1284.இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்
1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே
2. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காகப் பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
4. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப் போனேன்
என்னை மன்னியும் தெய்வமே
5. அநியாயம் செய்தேன் கடுங் கோவம் கொண்டேன்
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே
2. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காகப் பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
4. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப் போனேன்
என்னை மன்னியும் தெய்வமே
5. அநியாயம் செய்தேன் கடுங் கோவம் கொண்டேன்
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
1285.இறை சமூகமாய் நாங்கள் வாழவே
இறை சமூகமாய் நாங்கள் வாழவே
இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே - 2
1. அன்பினைக் கொண்டு பகைமையை வென்று
பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு
அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே
2. நிறை குறையோடு பிறரையும் ஏற்று
நிறைமகிழ்வை வாழ்வில் உணர்ந்திடவே
இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில்
இணைந்திருந்து நாங்கள் செயல்படவே
3. இறையாட்சியில் நம்பிக்கை கொண்டு
இறைவாக்குப் பணியை யாம் தொடர்ந்திடவே
புது உலகமைக்க திடமுடன் உழைக்கும்
புதுப்படைப்பாய் என்றும் வாழ்ந்திடவே
இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே - 2
1. அன்பினைக் கொண்டு பகைமையை வென்று
பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு
அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே
2. நிறை குறையோடு பிறரையும் ஏற்று
நிறைமகிழ்வை வாழ்வில் உணர்ந்திடவே
இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில்
இணைந்திருந்து நாங்கள் செயல்படவே
3. இறையாட்சியில் நம்பிக்கை கொண்டு
இறைவாக்குப் பணியை யாம் தொடர்ந்திடவே
புது உலகமைக்க திடமுடன் உழைக்கும்
புதுப்படைப்பாய் என்றும் வாழ்ந்திடவே
1286.இறைவா இறைவா இறைவா
இறைவா இறைவா இறைவா
கருணை தெய்வமே கனிந்துருகும் இயேசுவே 2
1. கல்லினில் ஈரம் தந்தவரே - 2 உம்
நெஞ்சினில் நேசம் நானுணர்ந்தேன்
2. தனிமையில் இனிமை நீயானாய் - 2 உன்
உறவினில் நிறைவை நானுணர்ந்தேன்
3. உனது அன்பை நான் கண்டேன் - 2 அதன்
இனிமையைச் சுவைத்து மகிழ்ந்திருந்தேன்
4. மனிதனான உனைக் கண்டேன் - 2 என்
மானிட மாண்பின் நிலை உணர்ந்தேன்
கருணை தெய்வமே கனிந்துருகும் இயேசுவே 2
1. கல்லினில் ஈரம் தந்தவரே - 2 உம்
நெஞ்சினில் நேசம் நானுணர்ந்தேன்
2. தனிமையில் இனிமை நீயானாய் - 2 உன்
உறவினில் நிறைவை நானுணர்ந்தேன்
3. உனது அன்பை நான் கண்டேன் - 2 அதன்
இனிமையைச் சுவைத்து மகிழ்ந்திருந்தேன்
4. மனிதனான உனைக் கண்டேன் - 2 என்
மானிட மாண்பின் நிலை உணர்ந்தேன்
1287.இறைவா உம் தயவினிலே வாழ்ந்திட வந்தோம்
இறைவா உம் தயவினிலே வாழ்ந்திட வந்தோம்
1. பருவமழை பொழிகவென்று வேண்டியே நின்றோம்
2. நீர்நிலைகள் பெருகவென்று வேண்டியே நின்றோம்
3. பயிர்நிலைகள் செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
4. உயிர்களெல்லாம் மகிழ்கவென்று வேண்டியே நின்றோம்
5. நோய்நொடிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
6. பசிப்பிணிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
7. வறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
8. சிறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
9. செழுமையெல்லாம் சேர்கவென்று வேண்டியே நின்றோம்
10. நீதிநெறி செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
1. பருவமழை பொழிகவென்று வேண்டியே நின்றோம்
2. நீர்நிலைகள் பெருகவென்று வேண்டியே நின்றோம்
3. பயிர்நிலைகள் செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
4. உயிர்களெல்லாம் மகிழ்கவென்று வேண்டியே நின்றோம்
5. நோய்நொடிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
6. பசிப்பிணிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
7. வறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
8. சிறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
9. செழுமையெல்லாம் சேர்கவென்று வேண்டியே நின்றோம்
10. நீதிநெறி செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
1288.எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
எல்லார்க்கும் துணையாகும் வரம் ஈய வேண்டும் - 3
1. எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
மெய்யான வழி சென்று மகிழ்ந்தாட வேண்டும்
2. எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
எந்நாளும் உன் நாமம் நான் பாட வேண்டும்
எல்லார்க்கும் துணையாகும் வரம் ஈய வேண்டும் - 3
1. எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
மெய்யான வழி சென்று மகிழ்ந்தாட வேண்டும்
2. எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
எந்நாளும் உன் நாமம் நான் பாட வேண்டும்
1289.என் தலைமீது உம் திருஇரத்தம் சொரிந்து
என் தலைமீது உம் திருஇரத்தம் சொரிந்து
என் பாவங்களைக் கழுவும் என் இயேசுவே
1. இறை உன்னை மறந்து நான் பாவம் செய்தேன்
உம் இதயத்திற்கெதிராய் பாவம் செய்தேன்
2. பிற தெய்வம் தொழுது நான் பாவம் செய்தேன்
உன் நிறை அன்பிற்கெதிராய் பாவம் செய்தேன்
3. அயலானைப் பகைத்து நான் பாவம் செய்தேன்
உன் அன்பிற்கு எதிராய் பாவம் செய்தேன்
என் பாவங்களைக் கழுவும் என் இயேசுவே
1. இறை உன்னை மறந்து நான் பாவம் செய்தேன்
உம் இதயத்திற்கெதிராய் பாவம் செய்தேன்
2. பிற தெய்வம் தொழுது நான் பாவம் செய்தேன்
உன் நிறை அன்பிற்கெதிராய் பாவம் செய்தேன்
3. அயலானைப் பகைத்து நான் பாவம் செய்தேன்
உன் அன்பிற்கு எதிராய் பாவம் செய்தேன்
1290.என் பிழை எல்லாம் பொறுத்தருளும்
என் பிழை எல்லாம் பொறுத்தருளும் - 2
1. செந்நீர் வியர்வை சொரிந்தவரே
2. புண்படக் கசையால் துடித்தவரே
3. முண்முடி சூடிய மன்னவரே
4. துன்பச் சிலுவை சுமந்தவரே
5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே
1. செந்நீர் வியர்வை சொரிந்தவரே
2. புண்படக் கசையால் துடித்தவரே
3. முண்முடி சூடிய மன்னவரே
4. துன்பச் சிலுவை சுமந்தவரே
5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே
1291.என் வாழ்வில் என்றும் நீ இயேசுவே
என் வாழ்வில் என்றும் நீ இயேசுவே
எந்நாளும் நீயே என் இயேசுவே - 2
1. தாயுள்ளத்தோடு எனைத் தேற்ற வந்தாய்
தடுமாறி நின்றேன் உன் கரம் நீட்டிக் காத்தாய்
2. சுகமான வாழ்வு நான் வாழ்ந்த போது
சுவையூட்டும் அமுதாய் எனில் சேர்ந்த தலைவா
3. புயல் வீசும் நேரம் படகாக நானும்
அலைமோதி நின்றேன் கரை சேர்த்துக் காத்தாய்
எந்நாளும் நீயே என் இயேசுவே - 2
1. தாயுள்ளத்தோடு எனைத் தேற்ற வந்தாய்
தடுமாறி நின்றேன் உன் கரம் நீட்டிக் காத்தாய்
2. சுகமான வாழ்வு நான் வாழ்ந்த போது
சுவையூட்டும் அமுதாய் எனில் சேர்ந்த தலைவா
3. புயல் வீசும் நேரம் படகாக நானும்
அலைமோதி நின்றேன் கரை சேர்த்துக் காத்தாய்
1292.என் விழியே இயேசுவை நீ பாரு
என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு - 2
1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு - 2
2. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2
என் காதே இயேசுவின் மொழி கேளு - 2
3. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2
என் உயிரே இயேசுவின் பதம் சேரு - 2
என் நாவே இயேசுவை நீ பாடு - 2
1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு - 2
2. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2
என் காதே இயேசுவின் மொழி கேளு - 2
3. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2
என் உயிரே இயேசுவின் பதம் சேரு - 2
1293.என்னுயிரே இறைவா உன் திருவடி சரணம்
என்னுயிரே இறைவா உன் திருவடி சரணம்
உன் பதம் அமர்ந்து உன் முகம் காண
என்ன தவம் செய்தேன் நான் - 2
1. உம் மொழி கேட்க
2. உம் அன்பைச் சுவைக்க
3. உம் புகழ் பாட
4. உன்னுடன் பேச
5. உன் அருள் பெறவே
உன் பதம் அமர்ந்து உன் முகம் காண
என்ன தவம் செய்தேன் நான் - 2
1. உம் மொழி கேட்க
2. உம் அன்பைச் சுவைக்க
3. உம் புகழ் பாட
4. உன்னுடன் பேச
5. உன் அருள் பெறவே
1294.கருணை காட்டுமையா கவலை நீக்குமையா
கருணை காட்டுமையா கவலை நீக்குமையா
1. ஆதாமின் பிழைகளைப் பொறுத்தது போல்
அன்போடு அணைத்து வளர்த்தது போல்
2. இசுராயேல் செயல்களைப் பொறுத்தது போல்
இடர்களைப் போக்கிக் காத்தது போல்
3. தாவீதின் பிழைகளைப் பொறுத்தது போல்
தாழ்நிலை நீக்கி அணைத்தது போல்
4. சமாரியப் பெண்ணைப் பொறுத்தது போல்
சத்திய வழியில் அழைத்தது போல்
5. விபச்சாரப் பெண்ணைப் பொறுத்தது போல்
விடுதலை வாழ்க்கை கொடுத்தது போல்
6. சிலுவையில் கள்வனைப் பொறுத்தது போல்
சிதறிய மனிதனை இணைத்தது போல்
1. ஆதாமின் பிழைகளைப் பொறுத்தது போல்
அன்போடு அணைத்து வளர்த்தது போல்
2. இசுராயேல் செயல்களைப் பொறுத்தது போல்
இடர்களைப் போக்கிக் காத்தது போல்
3. தாவீதின் பிழைகளைப் பொறுத்தது போல்
தாழ்நிலை நீக்கி அணைத்தது போல்
4. சமாரியப் பெண்ணைப் பொறுத்தது போல்
சத்திய வழியில் அழைத்தது போல்
5. விபச்சாரப் பெண்ணைப் பொறுத்தது போல்
விடுதலை வாழ்க்கை கொடுத்தது போல்
6. சிலுவையில் கள்வனைப் பொறுத்தது போல்
சிதறிய மனிதனை இணைத்தது போல்
1295.குன்றின் மேலமர்ந்து மாபரன் இயேசு
குன்றின் மேலமர்ந்து மாபரன் இயேசு
மன்றினைப் பொழிந்து அறிவுரை தந்தார் - 2
அந்தக மாந்தர்க்குச் சீர்வழிக் காட்டிடச்
சிந்தையைத் தூண்டிடும் தேன்மொழி தந்தார் - 2
1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
எழில்மிகு விண்ணகம் அவர்களதே
துயரமுறுவோர் பேறுபெற்றோர்
அயரா ஆறுதல் மிகப் பெறுவர்
நீதியின் மைந்தர் நிறைவாழ்வு பெறுவர்
நீதி நல்வேந்தனின் தத்துவமன்றோ
2. சாந்தமுடையோர் பேறுபெற்றோர்
தாரணி முழுவதும் அவர்களதே
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்
இறைவனின் இரக்கம் மிகப் பெறுவர்
தூய மனத்தோர் கடவுளைக் காண்பர்
தூய நல்இயேசுவின் பொன்மொழியன்றோ
மன்றினைப் பொழிந்து அறிவுரை தந்தார் - 2
அந்தக மாந்தர்க்குச் சீர்வழிக் காட்டிடச்
சிந்தையைத் தூண்டிடும் தேன்மொழி தந்தார் - 2
1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
எழில்மிகு விண்ணகம் அவர்களதே
துயரமுறுவோர் பேறுபெற்றோர்
அயரா ஆறுதல் மிகப் பெறுவர்
நீதியின் மைந்தர் நிறைவாழ்வு பெறுவர்
நீதி நல்வேந்தனின் தத்துவமன்றோ
2. சாந்தமுடையோர் பேறுபெற்றோர்
தாரணி முழுவதும் அவர்களதே
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்
இறைவனின் இரக்கம் மிகப் பெறுவர்
தூய மனத்தோர் கடவுளைக் காண்பர்
தூய நல்இயேசுவின் பொன்மொழியன்றோ
1296.தந்தையே என் இறைவா உமதன்பைத் தருவாய்
தந்தையே என் இறைவா உமதன்பைத் தருவாய் - 3
1. இயேசுவே என் ஒளியே என்னோடு இருப்பாய் - 3
2. ஆவியே என் உயிரே துணையாக வருவாய் - 3
1. இயேசுவே என் ஒளியே என்னோடு இருப்பாய் - 3
2. ஆவியே என் உயிரே துணையாக வருவாய் - 3
1297.தனி முதல் இறைவனாம் தந்தையே வாழி
தனி முதல் இறைவனாம் தந்தையே வாழி
தனியொரு மைந்தனாம் இயேசுவே வாழி
தூய நல் ஆவியாம் இறைவனே வாழி
மூவோர் இறைவா என்றுமே வாழி
தனியொரு மைந்தனாம் இயேசுவே வாழி
தூய நல் ஆவியாம் இறைவனே வாழி
மூவோர் இறைவா என்றுமே வாழி
1298.தேவா உன் பதம் அமர்ந்து ஒரு வரம் கேட்டு நின்றோம்
தேவா உன் பதம் அமர்ந்து ஒரு வரம் கேட்டு நின்றோம் - 2
நாதா உன் அமைதியைத் தந்திடுவாய் - 2
உன் தாள் சரணமையா - 2
1. உன் கையில் என் பெயர் பொறித்து
கண்ணென எனைக் காப்பாய் - 2
சிறகுகளால் என்னை அரவணைப்பாய்
உன் தாள் சரணமையா - 2
2. அன்பால் அக இருள் களைய உன்னொளி தந்திடுவாய் - 2
நம்பினேன் உனையே இறையவனே - 2
உன் தாள் சரணமையா - 2
நாதா உன் அமைதியைத் தந்திடுவாய் - 2
உன் தாள் சரணமையா - 2
1. உன் கையில் என் பெயர் பொறித்து
கண்ணென எனைக் காப்பாய் - 2
சிறகுகளால் என்னை அரவணைப்பாய்
உன் தாள் சரணமையா - 2
2. அன்பால் அக இருள் களைய உன்னொளி தந்திடுவாய் - 2
நம்பினேன் உனையே இறையவனே - 2
உன் தாள் சரணமையா - 2
1299.புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு இயேசுவை
புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு இயேசுவை
புகழ்ந்திடு காலையிலே
1. புகழ்ந்திடு பகலினிலே
2. புகழ்ந்திடு மாலையிலே
3. புகழ்ந்திடு இரவினிலே
4. புகழ்ந்திடு பொழுதெல்லாம்
புகழ்ந்திடு காலையிலே
1. புகழ்ந்திடு பகலினிலே
2. புகழ்ந்திடு மாலையிலே
3. புகழ்ந்திடு இரவினிலே
4. புகழ்ந்திடு பொழுதெல்லாம்
1300.வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும்
வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும் - 2
1. வேண்டுகின்றேன் தினமும் தொடர்ந்து - 2
2. துவளுகின்றேன் தினமும் தனியே - 2
3. தேடுகின்றேன் தினமும் உன்னையே - 2
4. அழுகின்றேன் தினமும் நொந்து - 2
5. புலம்புகின்றேன் தினமும் அழுது - 2
6. வருந்துகின்றேன் தினமும் நினைத்து - 2
1. வேண்டுகின்றேன் தினமும் தொடர்ந்து - 2
2. துவளுகின்றேன் தினமும் தனியே - 2
3. தேடுகின்றேன் தினமும் உன்னையே - 2
4. அழுகின்றேன் தினமும் நொந்து - 2
5. புலம்புகின்றேன் தினமும் அழுது - 2
6. வருந்துகின்றேன் தினமும் நினைத்து - 2
1301.வாழ்வு தருவது இறைவார்த்தை
வாழ்வு தருவது இறைவார்த்தை - 2
1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே - 2
2. துயரமுள்ளோர் பேறுபெற்றோர்
ஆறுதலை அடைவார்கள் - 2
3. சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர்
மண்ணுலகு அவர் உரிமை - 2
4. நீதியில் நிலைப்போர் பேறுபெற்றோர்
நிறைவினையே பெறுவார்கள் - 2
5. இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்
இரக்கத்தையே பெறுவார்கள் - 2
6. தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்
இறைவனையே காண்பார்கள் - 2
7. சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்
இறைமக்களாய்த் திகழ்வார்கள் - 2
8. துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே - 2
1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே - 2
2. துயரமுள்ளோர் பேறுபெற்றோர்
ஆறுதலை அடைவார்கள் - 2
3. சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர்
மண்ணுலகு அவர் உரிமை - 2
4. நீதியில் நிலைப்போர் பேறுபெற்றோர்
நிறைவினையே பெறுவார்கள் - 2
5. இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்
இரக்கத்தையே பெறுவார்கள் - 2
6. தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்
இறைவனையே காண்பார்கள் - 2
7. சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்
இறைமக்களாய்த் திகழ்வார்கள் - 2
8. துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே - 2
1302.வாழ்வென்ற கொடைக்காக நிறைவாக யாம்
வாழ்வென்ற கொடைக்காக நிறைவாக யாம்
நன்றி நவில்கின்றோம் - அதை
முறையாக வாழ்ந்திடவே நிறை ஞானம்
தினம் நல்க வேண்டுகிறோம்
வாழ்கின்ற நிமிடங்கள் பயனுள்ளதாய் மாற
1. வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்தே யாம் வாழ்ந்திட
உமதாவி எனை ஆள வேண்டும்
வாழ்க்கையை வாட்டிடும் துயரங்கள் சோகங்கள்
பாதையை மறைத்திடும் இருளான மேகங்கள்
என்றென்றும் மறைந்தோட வேண்டும்
இறை இயேசு நாயகன் காட்டிய வழியிலே
நிறைவாழ்வு காண்போம் - 2
நன்றி நவில்கின்றோம் - அதை
முறையாக வாழ்ந்திடவே நிறை ஞானம்
தினம் நல்க வேண்டுகிறோம்
வாழ்கின்ற நிமிடங்கள் பயனுள்ளதாய் மாற
1. வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்தே யாம் வாழ்ந்திட
உமதாவி எனை ஆள வேண்டும்
வாழ்க்கையை வாட்டிடும் துயரங்கள் சோகங்கள்
பாதையை மறைத்திடும் இருளான மேகங்கள்
என்றென்றும் மறைந்தோட வேண்டும்
இறை இயேசு நாயகன் காட்டிய வழியிலே
நிறைவாழ்வு காண்போம் - 2