1468. கிறித்துவின் ஒளியிதோ
1469.உமது ஆவியை விடுத்தருளும்
உமது ஆவியை விடுத்தருளும்
ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும்
1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர்
மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர்
2. பூமியை நீர் அடித்தளத்தின் மீது அமைத்தீர்
அது எந்நாளும் அசையவே அசையாது
கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கின்றீர்
வெள்ளப்பெருக்கு மலைகளை மூடியிருக்கும்படி செய்தீர்
3. நீரூற்றுகள் ஆறுகளாய்ப் பெருக்கெடுக்க கட்டளை இடுகிறீர்
அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்
அவற்றினருகே வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன
மரக்கிளைகளிடைய இன்னிசை எழுப்புகின்றன
4. தம் உள்ளத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர்
உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது
கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர்
மனிதருக்குப் பயன்படப் பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர்
5. ஆண்டவரே, உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை
அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர்
உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக அல்லேலூயா

1470.ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார்
ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார்
எனவே அவரைப் பாடிடுவோம் - 2
1. குதிரை வீரனைக் குதிரையுடன் அவரே கடலில் வீழ்த்தி விட்டார் - 2
எனக்கு மீட்பராய் அவரே என் துணையும் காவலும் ஆயினரே
2. இறைவன்எனக்குஇவர்தானேஇவரைப் போற்றிப்புகழ்ந்திடுவேன்-2
என் முன்னோரின் இறைவனிவர் இவரை ஏற்றிப் புகழ்ந்திடுவேன்
3. போர்களில் வெல்பவர் ஆண்டவரே
ஆண்டவர் என்பது அவர் பெயராம்

1471.அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா - 3
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்
1. என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று
இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக அல்லேலூயா
2. ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது
ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது
இறந்தொழியேன் உயிர் வாழ்வேன்
ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்
3. வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே
வீட்டுக்கு மூலைக் கல்லாயிற்று
ஆண்டவர் செயலிது நம் கண்ணுக்கு வியப்பாய் உள்ளது

1472.கலைமான் நீரோடை நாடிச் செல்வதுபோல்
கலைமான் நீரோடை நாடிச் செல்வதுபோல்
களிப்பாய் உம்மை என் நெஞ்சம் நாடிடுதே
1. உள்ளம் தாகம் கொண்ட இறைவன் மீதே
உயிர் உள்ள எந்தன் இறைவன் மீதே
எங்குச் செல்வேனோ என்று காண்பேனோ - 2
எந்தன் இறைவன் திருமுகத்தை
2. மக்கட் கூட்டத்தை நான் அழைத்துக்கொண்டு
வல்ல இறை இல்லமும் சென்றேனே
அக்களிப்பும் புகழிசையும் முழங்க - 2
அந்த விழாக் கூட்டத்தில் நடந்தேனே

1473.கோயிலின் வலப்புறமிருந்து
கோயிலின் வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் - அல்லேலூயா - 3
ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது.
தந்தையும் மகனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
தொடக்கத்தில் இருந்தது போல
இன்றும் என்றும் என்றென்றுமாகவும் - ஆமென்

1474.உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
என் நம்பிக்கை பலமானதே
ஒருபோதும் இனி நான் பயம் கொள்ள மாட்டேன்
என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்
என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்
ஐயா நீரே என் கடவுள்
1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன் - 2
காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்
விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன் - 2
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன் - 2
2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்சோதியை
உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன் - 2
இனி மாறாது மறையாது என் நம்பிக்கை
அடி பிறழாது சிதையாது இறைமாளிகை
உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை - நம்பினேன்

1475. கிறித்து உயிர்த்தார் இந்த உலகையே உய்த்து விட்டார்
கிறித்து உயிர்த்தார் இந்த உலகையே உய்த்து விட்டார்
வென்றார் கிறித்து வென்றார் - இந்த
அலகையை வென்று விட்டார்
ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே அல்லேலூயா பாடுவோம்
1. மரணத்தை வென்ற மாவீரன்
மனுக்குலம் மீட்ட இறை மைந்தன்
கல்லறை விட்டு உயிர்த்தெழுந்தார்
கவலைகள் நமக்கு இனிஇல்லை
2. மரணத்தைக் கண்டும் பயமில்லை
மாபரன் இயேசு உயிர்த்து விட்டார்
பேயின் தலையை மிதித்து விட்டார்
பிணக்குகள் எல்லாம் போக்கிவிட்டார்

1476. சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
இயேசு உயிர்த்தார் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. விதைக்கப்படுவது அழிவுக்குரியது
உயிர்த்து எழுவது அழியாதது
புதைக்கப்பட்டதோ வலுவற்றது
உயிர்த்து எழுவதோ வலுவானது
மண்ணில் விழுந்து மடியும் விதைகள்
எழுந்த போது தருமே பலன்கள்
2. அழிவுப் பாதைகள் சாவின் மேடுகள்
அன்பின் ஆட்சிகள் உயிர்ப்பின் வாசல்கள்
பாவம் என்பது இருண்ட மேகங்கள்
திருந்தி வாழ்வது நீல வானங்கள்
பாவம் மறந்து பாதை திருத்து
உயிர்ப்பு வாழ்வே நமது விருந்து
இயேசு உயிர்த்தார் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. விதைக்கப்படுவது அழிவுக்குரியது
உயிர்த்து எழுவது அழியாதது
புதைக்கப்பட்டதோ வலுவற்றது
உயிர்த்து எழுவதோ வலுவானது
மண்ணில் விழுந்து மடியும் விதைகள்
எழுந்த போது தருமே பலன்கள்
2. அழிவுப் பாதைகள் சாவின் மேடுகள்
அன்பின் ஆட்சிகள் உயிர்ப்பின் வாசல்கள்
பாவம் என்பது இருண்ட மேகங்கள்
திருந்தி வாழ்வது நீல வானங்கள்
பாவம் மறந்து பாதை திருத்து
உயிர்ப்பு வாழ்வே நமது விருந்து
1477.சிலுவையில் அறையுண்ட மெசியா
சிலுவையில் அறையுண்ட மெசியா
இறை வல்லமையும் இறை ஞானமுமாயுள்ளார் - இதை
உள்ளங்கள் உணர்ந்திடட்டும் இந்த உலகமும் உணர்ந்திடட்டும்
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா - 2
1. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் மன
நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்
நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் எங்கள்
தேவனே சிலுவையில் பொருள் சொல்லுவாய் இந்த
சிலுவை உமது வல்லமையோ
இந்த சிலுவை உமது ஞானமோ - அல்லேலூ அல்லேலூ
2. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்
உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை
பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே
எங்கள் வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன் இந்த - சிலுவை
3. குற்றமில்லாதோர் மாய்கின்றார் உம்
குழந்தைகள் பசியில் மடிகின்றார்
நீதியை அழிப்போர் வாழ்கின்றார் பல
நேரிய மனிதர்கள் வீழ்கின்றார் இந்த - சிலுவை

1478.வைகறை வானமே மேகப் பூக்களால்
வைகறை வானமே மேகப் பூக்களால்
விடியல் கோலம் போடு லலலலா
மரண இருள் நின்று வெளிச்ச வெள்ளமாய்
இயேசு உயிர்த்தார் இன்று ல ல ல லா
ஏற்றத்தாழ்வுகள் இனியும் இல்லையே
விடுதலை கீதங்கள் புவியெங்கும் முழங்க
1. வான் மழை இங்கு வந்து வாழும் முறையைச் சொல்லித் தந்து
மண்ணுக்கென தன்னைத் தந்ததே
தான் என்னும் எண்ணம் நீங்கி
நாம் என்னும் கொள்கை கொண்டால்
மண்ணில் நாளும் மாற்றம் தோன்றுமே
நீதி நிலைத்திடும் பூமி நிமிர்ந்திடும் ல லா
வானம் வசப்படும் வாழ்வு வளப்படும் ல லா
பேதங்கள் இல்லாத வேதங்கள் வாழ்வாக
சோகங்கள் சூழ்கின்ற மேகங்கள் வாழ்வாக
பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே
2. பஞ்சம் பிணி இல்லை என்னும் யுத்தமில்லா பூமி வேண்டும்
இறைவன் ஆட்சி என்று உயிர்க்கு வஞ்சம்
பேசும் நெஞ்சம் எல்லாம்
வாழ்க்கைக்கினி ஆகாதென்று தத்துவங்கள் எங்கும் முளைக்கும்
நன்மை நிறைந்திடும் தீமை தகர்ந்திடும் லலா
பொய்மை விலகிடும் வாய்மை நிலைத்திடும் லலா
எல்லோரும் நல்லாகும் பூபாளம் இசை பாட