1247.அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன்
அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன்
இப்போது உன்னைத் தேடி வந்தேன்
இறைஞ்சுகிறேன் இரக்கம் வையும் ஏற்றருளும் இறைவா
1. செல்வத்தைப் புகழ்ந்தேன் ஏழ்மையை இகழ்ந்தேன்
உன்னை இழந்தேன் ஊதாரி ஆனேன் - 2
பெற்றோரின் பெருமையை மறந்தே திரிந்தேன் - 2
பாவங்கள் அனைத்திலும் உழன்றே நொந்தேன்
2. தந்தை உன் அன்பை ஏற்றிட மறந்தேன்
மந்தையைப் பிரிந்த செம்மறி ஆனேன் - 2
நிந்தனை புரிவோர் வழியில் கலந்தேன் - 2
உந்தனை நினைத்தேன் திரும்பி வந்தேன்
3. பாவத்தின் சுமையை இன்றுதான் உணர்ந்தேன்
பண்புள்ள தந்தாய் அண்டி வந்தேன் - 2
கதியென்று செல்ல வேறிடம் இல்லை - 2
கையேந்தி கேட்கிறேன் உந்தன் பிள்ளை

1248.அப்பா நான் தவறு செய்தேன்
அப்பா நான் தவறு செய்தேன்
உன் அன்பை உதறிச் சென்றேன்
நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்
என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் - 2
1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்
உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்
உன்னைப் பிரிந்து நொந்தேன் - 2
2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்
ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா - 2

1249.அப்பா நீ இருக்க தப்பாக வாழ்ந்து
அப்பா நீ இருக்க தப்பாக வாழ்ந்து
வெகு தூரம் சென்று விட்டேன் - 2
இப்போது வருந்தி வருகின்றேன் - 2
ஏற்றிட வேண்டுகின்றேன் - இறைவா
1. பாவத்தின் அகலப் பாதையிலே பாதாளம் சேர்ந்துவிட்டேன்
பன்றிகள் போலச் சகதியிலே பல்லாண்டு வாழ்ந்துவிட்டேன்
அப்பா அப்பா - 3
திருந்தி நான் திரும்புகின்றேன் என்னைத் தயவாய்த் தாங்கிடுவாய்
மகனென்ற நிலை இழந்தேன் என்னை மனதார ஏற்றிடுவாய்
2. மோகத்தின் மாய சேற்றினிலே மயங்கி நான் மதி இழந்தேன்
போதையின் அடிமைப் பாதையிலே மனம்போல வாழ்ந்துவந்தேன்
அப்பா அப்பா - 3
கலங்கி நான் கதறுகிறேன் என்னைக் கனிவாய்க் காத்திடுவாய்
மனம் நொந்துவருந்துகின்றேன் என்னை மனதார ஏற்றிடுவாய்

1250. அன்பான இறைவா பாவம் செய்தேன்
அன்பான இறைவா பாவம் செய்தேன்
அன்பாய் மன்னிப்பீரே
அன்பின் மானிடரே பாவம் செய்தேன் அன்பாய் ஏற்பீரே
1. கண்களால் பாவம் செய்தேன் - என்
சிந்தனையால் பாவம் செய்தேன் - 2
சொற்களால் பாவம் செய்தேன் - என்
செயல்களால் பாவம் செய்தேன் - 2
2. கடமை தவறி நான் பாவம் செய்தேன்
கருணை புரியாமல் பாவம் செய்தேன் - 2
நன்மை செய்யாமல் பாவம் செய்தேன்
நன்மை செய்விடாமல் பாவம் செய்தேன் - 2
3. அம்மா மரியே நீர் மன்றாடுவீர்
தூயவரே தூதர்களே மன்றாடுவீர் - 2
மானிடரே நீவீர் மன்றாடுவீர்
இறையை நோக்கி மன்றாடுவீர் - 2

1251.இயேசு இயேசு பாவத்தில் வீழ்ந்த பாவி என்னை
இயேசு இயேசு பாவத்தில் வீழ்ந்த பாவி என்னை
பரிவோடு எடுத்து அணைப்பது ஏன்
என்ன செய்வேன் நான் உமக்காக
உம்மையே தருகிறீர் எமக்காக
1. பாவத்திற்கு கூலி மரணம் - 2
பாம்பைப்போல் பாவம் என்னைத் தொடரும் - 2
அதற்காய்த் தானோ அழுதீரோ
தந்தாய் என் பிள்ளைகளை மன்னியும் என்று
கல்வாரியில் கதறினீரோ - 2 என்ன செய்வேன் நான்
2. உம்மை மறந்தேன் என்னையே இழந்தேன் - 2
காய்ந்த மரமாய் மாறிப்போனேன் - 2
அதற்காய்த் தானோ அழுதீரோ
தாகமாய் நான் இருக்கிறேனென்று
எனை வாழவைக்க நீரழுதீரோ - 2 என்ன செய்வேன் நான்

1252.இயேசுவே என் தெய்வமே என்மேல் மனமிரங்கும்
இயேசுவே என் தெய்வமே என்மேல் மனமிரங்கும் - 2
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே
1. அநியாயம் செய்தேன் கடுங்கோவம் கொண்டேன்
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா என்னை மன்னியும் தெய்வமே
2. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா என்னை மன்னியும் தெய்வமே

1253.இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா - 4
எத்தனை நாள்கள் அலைந்து திரிந்து
உம்மிடமே சேர்ந்துவிட்டேன்
இயேசு நாயகா எந்தன் இதய தெய்வமே - 2
நீரே என் ஆதாரம் இயேசு நாயகா
நீரே என் ஆகாரம் இயேசு நாயகா
அன்னையைப் போல் நீ என்னை அணைத்திடுவாயே - 2
சேர்ந்துவிட்டேன் உம்மிடமே இயேசு நாயகா
1. தாகமுடன் வாழ்வினிலே உள்ளவரெல்லாம்
என்னிடமே வாருமென்று அழைத்திடும் தேவா - 2
இதயத்திலே வேதனையும் நெஞ்சினிலே சாதனையும் - 2
நீக்கிடவே விரைந்திடுவாய் இயேசு நாயகா
2. வாழ்க்கையிலே வதங்கிவிழும் மானிடர் எல்லாம்
என்னிடமே வாரும் என்று அழைத்திடும் தேவா - 2
மனத்தினிலே கவலைகளும் உள்ளத்திலே சோகத்தையும் - 2
நீக்கிடவே அருள் புரிவாய் இயேசு நாயகா

1254.இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும்
இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும் - 2
அளவில்லா இரக்கம் கொண்டவரே
அன்பினால் எம்மை ஆள்பவரே - 2
1. திடம் இதயம் தருபவரே தினம் தினம் எம்மைக் காப்பவரே - 2
வேண்டிடும் வரங்கள் அளிப்பவரே
வேதனை யாவையும் தீர்ப்பவரே - 2
அளவில்லா இரக்கம் கொண்டவரே
அன்பினால் எம்மை ஆள்பவரே - 2
1. திடம் இதயம் தருபவரே தினம் தினம் எம்மைக் காப்பவரே - 2
வேண்டிடும் வரங்கள் அளிப்பவரே
வேதனை யாவையும் தீர்ப்பவரே - 2
1255.உம் இரத்தத்தால் எம்மைக் கழுவும்
உம் இரத்தத்தால் எம்மைக் கழுவும்
1. உலகின் பாவம் போக்கும் இயேசுவே
2. மனிதனாய் மண்ணில் பிறந்த இயேசுவே
3. வியர்வையாய்த் திரு இரத்தம் சிந்திய இயேசுவே
4. கசையால் அடிபட்டு நொந்த இயேசுவே
5. முள்முடி தலையில் தாஙகிய இயேசுவே
6. என் பாவச் சிலுவையைச் சுமந்த இயேசுவே
7. எனக்காக சிலுவையில் அறையுண்ட இயேசுவே
8. சிலுவையில் தொங்கியே மரித்த இயேசுவே
9. மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசுவே
10. பாவியைத் தேடி மன்னிக்கும் இயேசுவே

1256.என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும் - 2
உன் குரல் எனத் தெரிந்தும் கேட்காமல் நான் திரிந்தேன்...
உன் முகத்தைக் கண்ட பின்னும்
பேசாமல் திரும்பிக்கொண்டேன்...
1. உன் அருள் எனில் இருந்தும் உணராமல் நான் வாழ்ந்தேன்..
உன் வழியை அறிந்திருந்தும் நடவாமல் மாறிச் சென்றேன்...
2. உதவி செய்ய வாய்ப்பிருந்தும் உதவாமல் உதறிச் சென்றேன்...
உண்மைவாழ்வில்தெளிவிருந்தும்உலகப்போக்கில்நானலைந்தேன்...

1257.என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய் - 2
1. செந்நீர் வேர்வை சொரிந்தவரே - என்
2. புண்படக் கசையால் துடித்தவரே - என்
3. முள்முடி சூடிய மன்னவரே - என்
4. துன்பச் சிலுவை சுமந்தவரே - என்
5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே - என்
6. மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தவரே - என்
7. நற்கருணை வாழ் நல்லவரே - என்

1258.கருணை இறைவா சரணம் கடைக்கண் பாராய் சரணம்
கருணை இறைவா சரணம் கடைக்கண் பாராய் சரணம்
1. நட்பினை விடுத்தோம் நலம்தனை இழந்தோம்
2. ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம்
3. நீதியை மறந்தோம் நேர்மையைத் துறந்தோம்
4. ஒளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம்
5. மன்னிக்க மறந்தோம் செருக்குடன் இருந்தோம்
1. நட்பினை விடுத்தோம் நலம்தனை இழந்தோம்
2. ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம்
3. நீதியை மறந்தோம் நேர்மையைத் துறந்தோம்
4. ஒளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம்
5. மன்னிக்க மறந்தோம் செருக்குடன் இருந்தோம்
1259.கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா
கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா - 2
கருணை கூருமையா எங்கள் கறைகள் நீக்குமையா
எங்கள் கறைகள் நீக்குமையா - 2 இயேசையா - 4
1. கள்ளம் கபடு சூது நினைப்பேன் காரிருள் நீக்குமையா - 2
உள்ளம் உருகி உனை நான் அழைத்தேன் - 2
உன் கரம் நீட்டுமையா - 2 இயேசையா - 4
2. இறை உன்னைப் பிரிந்தேன் இதயம் நொந்தழுதேன்
இரக்கம் காட்டுமையா - 2
மறையினை மறந்தேன் மனத்தையும் இழந்தேன் - 2
மன்னிப்பு தாருமையா - 2 இயேசையா - 4
3. அனலிடை துடித்த புழுப்போலானேன் அன்பு கூருமையா - 2
கானலைக் கண்ட மான் போலானேன் - 2
மயக்கம் தீருமையா - 2 இயேசையா - 4

1260.தந்தாய் தவறு செய்தேன்
தந்தாய் தவறு செய்தேன்
மன்னித்து என்னை ஏற்றிடுவாய் - 2
உனக்கெதிராய்த் தீவினை புரிந்தேன்
திருத்தி என்னை ஏற்றிடுவாய்
1. உன்னைப் பிரிந்து எங்கோ சென்றேன்
உனது அன்பை மறந்து நின்றேன் - 2
உன்னோடு இருந்திட வேண்டும்
உனக்கென நான் வாழ வேண்டும்
2. உனது செல்வம் அனைத்தும் இழந்து
உலகம் பழிக்க அழிந்து சிதைந்தேன் - 2
உன்னோடு இருந்திட வேண்டி
உனதன்பைத் தேடி வந்தேன்
மன்னித்து என்னை ஏற்றிடுவாய் - 2
உனக்கெதிராய்த் தீவினை புரிந்தேன்
திருத்தி என்னை ஏற்றிடுவாய்
1. உன்னைப் பிரிந்து எங்கோ சென்றேன்
உனது அன்பை மறந்து நின்றேன் - 2
உன்னோடு இருந்திட வேண்டும்
உனக்கென நான் வாழ வேண்டும்
2. உனது செல்வம் அனைத்தும் இழந்து
உலகம் பழிக்க அழிந்து சிதைந்தேன் - 2
உன்னோடு இருந்திட வேண்டி
உனதன்பைத் தேடி வந்தேன்
1261.தந்தையின் வீட்டிற்குத் திரும்பிடுவேன் நான்
தந்தையின் வீட்டிற்குத் திரும்பிடுவேன் நான்
எந்தையின் பாதம் பணிந்திடுவேன் - 2
மகனாக அல்ல பணியாளன் எனவே - 2
மன்னித்து ஏற்றிட மன்றாடுவேன்
1. ஊழியர் பலரும் தந்தையின் வீட்டில்
உண்டு மகிழ்ந்து உறவாடும் போது - 2
பசியின் பிடியில் பன்றிகள் நடுவில் - 2
ஊதாரி மைந்தன் உழல்வதும் ஏனோ - 2
2. வாடி வரும் எனைத் தந்தையும் காண்பார்
ஓடி வந்து தான் அணைத்துக் கொள்வார் - 2
மாண்டேன் நான் என்று எண்ணிய தந்தை - 2
மீண்டேனென்றேதான் கொண்டாடி மகிழ்வார் - 2
எந்தையின் பாதம் பணிந்திடுவேன் - 2
மகனாக அல்ல பணியாளன் எனவே - 2
மன்னித்து ஏற்றிட மன்றாடுவேன்
1. ஊழியர் பலரும் தந்தையின் வீட்டில்
உண்டு மகிழ்ந்து உறவாடும் போது - 2
பசியின் பிடியில் பன்றிகள் நடுவில் - 2
ஊதாரி மைந்தன் உழல்வதும் ஏனோ - 2
2. வாடி வரும் எனைத் தந்தையும் காண்பார்
ஓடி வந்து தான் அணைத்துக் கொள்வார் - 2
மாண்டேன் நான் என்று எண்ணிய தந்தை - 2
மீண்டேனென்றேதான் கொண்டாடி மகிழ்வார் - 2
1262.தந்தையே இறைவனே இரக்கமாயிரும்
தந்தையே இறைவனே இரக்கமாயிரும்
மைந்தனே இயேசுவே இரக்கமாயிரும்
ஆவியே இறைவனே இரக்கமாயிரும்
உறவில் வாழும் மூவோர் இறைவனே இரக்கமாயிரும்
1. ஊதாரி மைந்தனாய் அலைந்து திரிந்து
உந்தன் அன்பை உதறிச்சென்றேன்
என் தேவனே என் இறைவனே
என்னை மன்னியும் என்னை மன்னியும்

1263.நம்பி வந்தேன் இயேசுவே என்னைக் குணப்படுத்தும்
நம்பி வந்தேன் இயேசுவே என்னைக் குணப்படுத்தும் - 4
1. வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரே என்னும் உண்மையை
2. எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்
3. உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே
4. நான் வாழ பிறரைக் கெடுத்த பாவி என்னை மன்னியும்
5. மனிதரிடையே உம்மைக் காணும் பார்வை எனக்குத் தாருமே
6. இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே
7. வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியைத் தாருமே
8. உண்மை உழைப்பில் உயர்ந்துவாழும் உணர்வு என்னில்ஊட்டுமே
9. எனக்குத் தீமை செய்தோரை மன்னித்து மறக்க உதவுமே

1264.நான் காணாமல் போன ஆடல்லவா
நான் காணாமல் போன ஆடல்லவா
கர்த்தர் என்னைத் தேடுகிறார் - 2
1. ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையே
அன்புமீறி நான் நடந்தேன் - 2
ஆபேலைக் கொன்ற காயினைப் போல
மனுக்கொலை நான் புரிந்தேன்
ஆரம்ப முதலே ஆபத்தில் இருந்தேன்
அன்பர் என்னைத் தேடுகின்றார்
2. கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தார்
காட்டித் தந்த யூதாசானேன் - 2
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்தேன்
பெரும் பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்
கர்த்தர் என்னைத் தேடுகிறார் - 2
1. ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையே
அன்புமீறி நான் நடந்தேன் - 2
ஆபேலைக் கொன்ற காயினைப் போல
மனுக்கொலை நான் புரிந்தேன்
ஆரம்ப முதலே ஆபத்தில் இருந்தேன்
அன்பர் என்னைத் தேடுகின்றார்
2. கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தார்
காட்டித் தந்த யூதாசானேன் - 2
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்தேன்
பெரும் பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்
1265.நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே - 2
1. விழுந்து விட்டேன் - மனம் உடைந்துவிட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே - 2
2. கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே - 2
3. புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை காட்டும் இயேசுவே - 2
4. சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே - 2
5. நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே - 2

1266.பரிசுத்த வாழ்க்கையில் வாழ்வதற்கு
பரிசுத்த வாழ்க்கையில் வாழ்வதற்கு
என் சக்தி எனக்குப் போதவில்லை - 2
மீண்டும் மீண்டும் விழாமல் இருக்க
உன் ஆவியின் வரங்கள் வேண்டுமையா - 2
பரிசுத்தனே பரிசுத்தனே - 2
பரிசுத்த நதியில் எனை நனைத்திடுவாய்
பரிசுத்த குருதியில் எனைக் கழுவிடுவாய் - 2
1. எம் வாழ்வின் செல்வங்கள் நிலைத்து இருக்குமா
எம் வாழ்வின் உறவுகள் என்னை இரட்சிக்குமா - 2
எத்தனை செல்வங்கள் நான் சம்பாதித்தும்
என் ஆன்மா இழந்தால் என்ன இலாபம் - 2
- பரிசுத்தனே பரிசுத்தனே
2. எம் வாழ்வில் கீர்த்தி நிலைத்துத் தொடருமா
எம் வாழ்வின் மேன்மை என்னுடன் நீடிக்குமா - 2
உன் அன்பு மாத்திரம் எனக்கிருந்தால்
எந்நாளும் வாழ்வேன் உன்னோடு தான் - 2

1267.பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும் இறைவனே
பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும் இறைவனே - 2
கருணைக் கடலும் நீ காக்கும் தலைவனும நீ - 2
1. இதயம் எல்லாம் இருப்பவன்
என் இருளைப் போக்கும் இனியவன்
வானம் பூமி எங்கிலும் நிறைந்து வாழும் தூயவன்
கடலைப் பிரியா அலையைப் போல
உன்னுள் வாழ எனைத் தந்தேன் - 2
2. காலைக் கதிரின் இனிமை போல்
கிருபை பொழியும் தேவா வா
காற்றும் மழையும் மாறலாம் உன் கனிந்த அன்பு மாறுமோ
பொன்னும் பொருளும் இல்லை இறைவா
எனையே தந்தேன் ஏற்பாயே - 2

1268.மன்றாடிப் புலம்புகின்றோம் - இயேசுவே
மன்றாடிப் புலம்புகின்றோம் - இயேசுவே
மன்னிக்க வேண்டுகிறோம் - 2
1. அன்பான தேவன் உன் வழி மறந்தோம்
அன்றாட வாழ்வில் பாவங்கள் புரிந்தோம் - 2
2. அருளின் கடலே உம்மையே மறந்தோம்
ஆயிரம் பிழைகள் உளமாறப் புரிந்தோம் - 2
3. ஐயா உன் பொன்மொழி அடிமைகள் மறந்தோம்
பொய்மொழி புகழும் தீமைகள் புரிந்தோம் - 2
மன்னிக்க வேண்டுகிறோம் - 2
1. அன்பான தேவன் உன் வழி மறந்தோம்
அன்றாட வாழ்வில் பாவங்கள் புரிந்தோம் - 2
2. அருளின் கடலே உம்மையே மறந்தோம்
ஆயிரம் பிழைகள் உளமாறப் புரிந்தோம் - 2
3. ஐயா உன் பொன்மொழி அடிமைகள் மறந்தோம்
பொய்மொழி புகழும் தீமைகள் புரிந்தோம் - 2
1269.மன்னிக்க வேண்டும் அன்பின் இறைவா
மன்னிக்க வேண்டும் அன்பின் இறைவா - 2
1. பொய்வழி நின்றேன் பெரும் பழி சுமந்தேன்
2. துன்புறும் மனித தோழமை மறந்தேன்
3. பெண்ணினம் இகழ்ந்தேன் பெரும் பாவம் புரிந்தேன்
4. மானுடம் போற்றும் மாண்பினைக் கொன்றேன்
5. தவித்திடும் ஏழையர் உரிமையைப் பறித்தேன்
6. பேரருள் நினைத்தேன் பேதைமை களைந்தேன்

1270.மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னவனே என்னை மன்னிப்பாயா - 2
1. பாதை தவறி நான் அலைந்தேன்
பாவக்குழியில் நான் விழுந்தேன்
தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
மனிதனின் குணத்தைக் குறைத்து விட்டேன்
3. மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகேன(ளே) எப்போதும் மன்னிக்கின்றேன் - 2
முள்முடி வேதனை உனக்காக
மும்முறை விழுந்ததும் உனக்காக
ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
என் ஆவியும் உயிரும் உனக்காக
சிலுவைப் பாடுகள் ... சிந்திய திருஇரத்தம் ...
கல்வாரி பலியும் ... காலமெல்லாம் நான் ...

1271.மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்பு தாருமே இறைவா
மன்னிப்பு தாருமே இறைவா - 2
1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்
மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்
அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில்
வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்
ஆண்டவர் ஞானத்திற் கினிமையுண்டு
கண்டிக்கக் காலத்தைக் கடத்துகின்றார்
கண்டித்துக் கருணைச் சொல் கூறுகின்றார் - பாவி
திருந்திட அருள்கொடை வழங்குகின்றார்
2. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்
நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்
குற்றங்கள் அனைத்தையும் எடுத்துவைத்தால் - தேவன்
குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்
பாவத்தை வெறுத்துத் தள்ளிடுவோம்
ஆபத்தை விலக்கிச் சென்றிடுவோம்
ஆன்மாவை அவரிடம் காட்டிடுவோம் - அதன்
அவலங்கள் கழுவிட வேண்டிடுவோம்

1272.மனம் மாறி வருகிறேன் நான்
மனம் மாறி வருகிறேன் நான்
எந்தன் வாழ்வை மாற்றும் இயேசுவே
1. ஆயன் உம்மைப் பிரிந்த ஆடாய் வாழ்ந்தேன்
அன்பர் உமைப் பிரிந்து ஊதாரியானேன்
2. இறைவார்த்தை நம்பாத காரணத்தாலே
இல்லத்திலே குழப்பங்கள் உருவாக்கினேன்
3. குடிவெறி பொருள் வெறித் தீமைகளாலே
குடும்பங்கள் சீர்குலையக் காரணமானேன்
4. சந்தேகம் வெறுப்பெனும் தீமைகளாலே
சந்தோச வாழ்க்கைதனை இழந்துவிட்டேன்

1273.மனம் வருந்தி மனம் திருந்தி உம்மைச் சரணடைந்தேன்
மனம் வருந்தி மனம் திருந்தி உம்மைச் சரணடைந்தேன்
என்னை ஏற்று மன்னித்தருள உம்மை வேண்டுகிறேன் - 2
1. கண்ணின் மணிபோல என்னைக் காத்தும் மண்ணில் வீழ்ந்தேனே
கோட்டை அரண் போல் என்னைக் காத்தும் தாண்டிப் போனேனே
2. நல்ல இதயம் எனக்குத் தந்தும் பகைமை கொண்டேனே
மன்னிக்கின்ற மனத்தைத் தந்தும் வெறுப்பில் வாழ்ந்தேனே
3. சகித்து வாழ பொறுமை தந்தும் சலித்துக் கொண்டேனே
ஏற்றுக்கொள்ளும் இதயம் தந்தும் உதறி எறிந்தேனே

1274.மாறவே ஆசைப்படுகிறேன் - என்னை
மாறவே ஆசைப்படுகிறேன் - என்னை
மாற்றிவிடும் அருமை நேசரே நான் - 2
1. சிந்தை மாறணும் செயல்கள் மாறணும்
பேச்சு மாறணும் என் பெருமை மாறணும் என் - 2
2. நடை மாறணும் என் உடை மாறணும்
உள்ளம் மாறணும் ஐயா உம்மைப் போலவே என் - 2
3. செபம் மாறணும் துதி மாறணும்
சுயம் சாகணும் ஐயா உந்தன் மேன்மைக்கே என் - 2
4. உம்மைப் பார்க்கணும் உம்மை இரசிக்கணும்
உம்மோடிருக்கணும் நான் உமக்காய் வாழணும் - 2