முகப்பு


1503.இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக

1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக - 2
தீயவை யாவும் விலகிடுக - 2 அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக!

2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
பண்ணால் உம் புகழ் அவர் இசைக்க - 2
புனிதர் வான தூதருடன் - 2 உம்மை
புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக!
1504.இறைவா இறந்தவர்க் கமைதி தாரும்
இறைவா இறந்தவர்க் கமைதி தாரும்
மனமிரங்கி உன் திருவடிதனில் சேரும் ஓ - 2

1. வாழ்வென்னும் பயணம் முடிந்து விட - மறு
வாழ்வின்று இவர்க்குத் தொடங்கிடட்டும்
கல்லறையில் இவர் உடல்செல்ல - 2 வான்
இல்லத்தில் ஆன்மா இடம் பெறட்டும்
இறைவா இறைவா - 2
2. உம்வழி உலகில் தினம் நடந்து என்றும்
உம்பணி செய்தவர் இவர் இறைவா
நன்று என் மகளே வாவென்று நீர்
நடத்திச் செல்வீர் உம் வீட்டினுக்கே
இறைவா இறைவா - 2
1505.இறைவனின் புனிதரே துணை நிற்க வருவீர்
இறைவனின் புனிதரே துணை நிற்க வருவீர் குரு : இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!

எல் : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

குரு : உம்மைத் தம்மிடம் அழைத்த கிறித்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!

எல் : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

குரு : நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக

எல் : இவர் ஆன்மாவை ஏற்றுக்கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்
1506.இறைவா இவரது திருப்பயணம்
இறைவா இவரது திருப்பயணம்
இனிதே அமைந்திட இறைஞ்சுகின்றோம்

1. பாசுகா பயணம் இதுவேதான்
கிறித்தவர் செல்லும் வழி இதுதான்
இறப்பைக் கடந்த உயிர்ப்பிற்கு
இசைந்து செல்லும் வழி இதுதான்

2. அடிமைத் தளையை அறுத்தெறிந்து
ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள்
உரிமை நாடு கடந்து சென்றார் உண்மை இங்கே நடப்பது தான்

3. சிலுவை சுமந்த வழியினிலே சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே
சிலுவை பதிந்த சுவடுகளில் சீடர் இவரும் செல்கின்றார்

4. துன்பத்தின் வழியாய்த் திருஅவையும்
தூரப்பயணம் போவது போல்
பயணத்தின் முடிவில் இவ்வடியார்
பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்

5. விண்ணக விருந்து உண்டிடவே
விரைந்து செல்லும் இவ்வடியார்
திருமகன் வந்து பார்க்கையிலே
திருமண உடையுடன் திகழ்ந்திடவே

6. ஆண்டவர் அழைத்த நேரத்திலே
அணையா விளக்குடன் ஆயத்தமாய்
உடனே செல்லும் ஊழியராம் உண்மையில் பேறு பெற்றவரே

7. அந்நிய நாட்டின் எல்லைதனை
அடியார் இவரும் கடந்துவிட்டார்
இழப்பு அனைத்தும் அவரின்றி தவறாது தன்வீடு சேர்ந்திடவே

8. எனக்கு வாழ்வு கிறித்துவே தான்
என்றும் அவரோடிருப்பது தான்
தாயகம் திரும்பும் பயணி இவர் இறப்பு ஆதலின் ஆதாயம்
1507.இறைவா உமது அடியார் இவர்க்கு
இறைவா உமது அடியார் இவர்க்கு
இரங்கி அமைதி அளித்தருளும்
மண்ணக கோயிலில் ஏற்பதுபோல்
விண்ணக கோயிலில் இடம் அருளும்

1. திருநீராடி புனிதம் அடைந்து
திருஅருட் சாதனம் பலவும் பெற்று
அழியா வாழ்வைப் பெற்ற தலத்தில்
அழியும் உடலைச் சுமந்து வந்தோம்

2. நித்திய வாழ்வின் உணவை உண்டு
நித்தம் உமது வார்த்தையைக் கேட்டு
இனிவரும் வாழ்வில் நம்பிக்கை தந்த
இல்லத்தில் இவரைக் கொண்டு வந்தோம்

3. பாவப் பொறுத்தல் பலமுறை தந்து
பரமன் அன்பை இவர்க்கு அருளிய
தலமாம் கோயில் நோக்கியே வந்தோம்
தயவாய் இவர் பிழை பொறுத்தருள்வீர்

4. கிறித்துவின் மறைவுடல் அங்கம் இவரை
திருஅவை மக்கள் பரிவுடன் கொணர்ந்தோம்
என்றும் அழியா கிறித்து உடல் போல்
இன்றும் இவர் மகிமை பெறவே

5. வானவர் கூடி வரவேற்றிவரை ஆபிரகாமின் மடியில் வளர்த்தி
ஏழை இலாசர் அடைந்த பேற்றை எம்மவர் இவரும் அடைந்திடவே

6. எரியும் தீபம் கரத்தில் ஏந்தி ஏனத்தில் எண்ணெய் நிறையத் தாங்கி
நினையா நேரம் வந்திடும் தலைவரை
அணையா விளக்குடன் சந்திக்கச் செல்வோம்
1508.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
தீமையான தெதற்கும் அஞ்சேன்

1. என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு
பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார்
என் களைப்பை ஆற்றுகின்றார்; எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார்

2. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
தீமையானதெதற்கும் அஞ்சேன்
ஏனெனில் நீர் என்னோடு இருக்கின்றீர்
உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன

3. என் எதிரிகள் காண நீர் எனக்கு விருந்தொன்றைத்
தயாரிக்கின்றீர் என் தலைக்கு எண்ணெய் பூசீனீர்
என் கிண்ணம் நிரம்பிவழிகின்றதுஎன் கிண்ணம் நிரம்பிவழிகின்றது

4. கருணையும் அருளும் என்னைத் தொடரும்
என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்
ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்
ஊழி ஊழிக் காலமும் குடியிருப்பேன்
1509.சாகா வரம் தரும் உணவு நல் தேவாமிர்த உணவு
சாகா வரம் தரும் உணவு நல் தேவாமிர்த உணவு

1. பாலை நிலத்தில் அன்று பரமன் தந்தார் உணவு
போதிய உணவும் உண்டு போனார் மக்கள் மாண்டு

2. வானம் பொழிந்த உணவு வாழ்வு நல்கும் உணவு
இறைவன் அன்றோ உணவு இதனால் அங்கு நிறைவு

3. உடலே உண்மை உணவு உதிரம் உண்மை பானம்
அருந்தி அவரில் நிலைத்தால் அழியா உயிர்ப்பு உண்டு

4. ஆண்டவர் வருகையை நினைந்து அருந்தும் ஆயத்த விருந்து
போகும் வழியின் உணவு சேரும் வீட்டின் முன்சுவையே

5. இனிவரும் விருந்தில் நாமும் இறைவனை என்றும் புகழ்ந்து
இனிமேல் சாவே இல்லா இல்லம் வாழ்வோம் இனிது
1510.சென்று வா கிறித்தவனே
சென்று வா கிறித்தவனே - உலகை
வென்று விட்டாய் நீ விசுவாசத்தால்

1. உற்றார் உறவினர் நண்பரெல்லாம் சுற்றி நின்று வழியனுப்ப
உற்ற துன்பத்தில் ஆறுதலாய் உதவும் திருச்சபை அருகிருக்க

2. இறைவனின் புனிதரே துணை வருவீர்
தேவனின் தூதரே வந்தழைப்பீர்
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்

3. படைத்த தந்தை உனை ஏற்பார்
மீட்ட திருமகன் உனைக் காப்பார்
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்
அனைத்துப் புனிதரும் உனைச் சேர்வார்

4. நித்திய அமைதியில் சேர்ந்திடுவாய்
நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய்
ஆண்டவர் எமையும் அழைக்குங் கால்
அவரோ டுன்னையும் சந்திப்போம்
1511.மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் - 2

1. விரிந்தத் திருக் கைகால்கள் விலாவில் இருந்தோடும்
விலையில்லா உதிரத்தால் அவர்களை விண் சேரும் - 2

2. எரிகின்ற நெருப்பினிலே புழுப்போல வாடி
எள்ளளவும் சுகமின்றி ஆறுதலைத் தேடி
புரிந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
புலம்பி அழும் அவர்களுக்கு அருள்மாரி பெய்து - 2
1512.முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா
உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன் இயேசையா - 2

1. நானே உயிர்தரும் ஊற்று என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ - 2
உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்
இறப்பில்லையோ இருள் இல்லையோ தாகம் இல்லையோ

2. நானே உயிர்தரும் உணவு என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ - 2
உம் உடலை உண்ணும் எனக்கென்றும்
பசியில்லையோ துயர் இல்லையோ இறப்பில்லையோ
1513.சுவாமி பாதாளங்களினின்று
சுவாமி பாதாளங்களினின்று
உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்
சுவாமி என் சத்தத்தைக் கேட்டருளும்

1. எனது விண்ணப்பத்தின் பேரொலியை
உமது செவி தந்து கேட்டருளும்

2. ஆண்டவரே நீர் எங்கள் குறைகளைப் பாராட்டுவீராகில்
உமக்கு முன் நிலைநிற்க இயல்பவன் யார்?

3. ஆனால் உம்மிடத்தில் மன்னிப்பு உள்ளதால்
பயபக்தியுடனே உம் பணிபுரிவோம்

4. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன்
அவர் வழிகளை நம்பினேன்

5. உதயக் காலத்தை எதிர்நோக்கும் சாமக்காவலைவிட
இசுரயேல் ஆண்டவரை எதிர்பார்ப்பதாக

6. ஏனெனில் அவர் தயை நிறைந்தவர்
மீட்பும் அவரிடம் ஏராளம்

7. அக்கிரமங்கள் அனைத்திலுமிருந்து
இசுரயேலை அவரே மீட்டருள்வார்
1514.நிறைமிகு அமைதியில் சேர்ந்திடுவாய்
நிறைமிகு அமைதியில் சேர்ந்திடுவாய்
நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய் - 2

1. இறைவனில் இறப்போர் பேறுபெற்றோர் - இனி
இவருக்கு மீண்டும் உழைப்பில்லையே
ஆற்றிய நன்மைகள் பின்தொடர - இளைப்
பாற்றியை அவர்கள் கண்டிடுவார்

2. சாவே உனது கொடுக்கெங்கே - எனச்
சாற்றும் பாறைகள் அதிர்ந்திடுமே
உயிர்ப்பின் எக்காளம் ஒலித்தங்கே - இவ்
உலகோர் தம்மை எழுப்பிடுமே

3. விண்ணக விருந்தின் முன்சுவையை - இங்கு
மண்ணிலே நுகர்ந்திட விரைந்திடுவோம்
எண்ணிலா புனிதர் கூட்டத்திலே - அங்குக்
கண்ணீரும் சாவும் மறைந்திடுமே
1515.கல்லறை மேட்டினில் மனுக்குலம்
கல்லறை மேட்டினில் மனுக்குலம்
கண்ணீர் சிந்தும் காட்சியினை
கருணைக் கண்ணால் நோக்கினார்
கவலையை கர்த்தர் போக்கினார்

1. அன்று கல்லறை அருகினில் அவரும் கண்ணீர் விட்டழுதார்
துன்புறு மனிதர் கண்ணீரைத் துடைக்க அன்றே முன்வந்தார்

2. நானே உயிரும் உயிர்ப்புமாவேன் நம்புவோர் இதனை இறந்திடார்
என்றே உரைத்து இறந்தவனை எழுப்பி உண்மை அறிவித்தார்

3. மூன்று நாள்கள் கல்லறையை மூடிக்கிடந்த இருளகற்றி
முன்பே உரைத்த வாக்கின்படி மூவுலகாள்பரன் உயிர்த்து வந்தார்
1516.தாயே உத்தரிக்கும் தலத்தோருக்கு ஓயா
தாயே உத்தரிக்கும் தலத்தோருக்கு ஓயா
தஞ்சமும் ஆதரவும் நீயே - 2

1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னைத்
துதித்திட அருள் செய்வாய் புரிந்து

2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்
1517.வாழ்வோர் இறந்தோர் நலம்பெற இறைவா
வாழ்வோர் இறந்தோர் நலம்பெற இறைவா
வாழ்த்தி வைத்தோம் காணிக்கையை

1. நிலத்தில் விழுந்த கோதுமை மணி
நிறைந்த பலனைத் தந்திடவே - 2
மடிந்து மண்ணில் மறைந்தால் தான்
மக்கள் பலரின் உணவாகும்

2. மண்ணில் புதைந்த இறைமகனும்
மகிமை கொண்டே உயிர்த்து வந்தார் - 2
இறந்த அவரின் அடியாரும்
இனிதே மகிமை அடைந்திடுவார்